ஹெல்மெட் போடுங்க… போலீஸ் நிக்கிறாங்க... வைரலாகும் அமைச்சரின் ட்வீட்!

 
டிஆர்பி ராஜா


 உலகம் முழுவதும் இன்று பலரது வாழ்க்கை கூகுளின் அட்வைஸ் கேட்டு தான் செயல்பட்டு வருகிறது. இது குறித்து அமைச்சர் ராஜா தன்னுடைய வலைதளத்தில் நகைச்சுவையாக பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்  “ பிரபல ஆன்லைன் இயங்குதளமான கூகுளின் முக்கிய பிரிவுகளில் ஒன்று தான் கூகுள் மேப். இந்த  கூகுள் மேப்பில் அவ்வப்போது புதுபுது அப்டேட்களை அந்நிறுவனம் வெளியிட்டு வருகிறது. முதலில் நாம் எங்கெங்கு போக வேண்டுமோ அதற்கான பாதையை மட்டுமே காண்பித்து வந்தது.
 


தற்போது எந்தெந்த பகுதியில் டிராபிக் அதிகமாக இருக்கும், ஹோட்டல் , பெட்ரோல் பங்க் முதல் அவசர நிலைக்கு அருகில் உள்ள கழிவறை வரையில் காட்டத் தொடங்கியுள்ளது. மேலும் சாட்டிலைட் மேப் உதவியுடன் இந்த இடம் இப்படி தான் இருக்கும் என கூகுள் மேப் காட்டுகிறது.தற்போது அதையும் தாண்டி அடுத்தகட்டமாக போலீஸ் நிற்கிறார்கள் ஹெல்மெட் போட்டுக்கோங்க என இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு சிக்னல் வரை அறிவுறுத்த தொடங்கியுள்ளது.

 இதனை தமிழக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா நகைச்சுவையாக தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில், கூகுள் மேப் போல தமிழக போக்குவரத்துதுறை, சென்னை மற்றும் மற்ற மாவட்டங்களிலும் இதே போல ஒரு விளம்பரத்தை செய்து மக்கள் மத்தியில் ஹெல்மேட் விழிப்புணர்வை ஏற்படுத்தலாம் என குறிப்பிட்டுள்ளார்  அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா.

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!