வெதர்மேன் அதிர்ச்சி ட்வீட்.. அக்டோபரில் மழை பெய்யுமா? பெய்யாதா..?

 
வெதர்மேன்

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பகலில் கொளுத்தும் வெயில் மாலையில் மழைச்சாரல், இரவில் கனமழை என வெளுத்து வாங்கி வருகிறது.   சென்னையை பொறுத்தவரை  இரவு நேரங்களில் இடி, மின்னலோடு மழை கொட்டி தீர்த்தது. இந்நிலையில் அடுத்த 3 மணி நேரத்தில்  சென்னை, திருவள்ளூர், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர்  மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  இந்நிலையில் தனியார் வானிலை ஆய்வாளர் வெதர் மேன்  இது குறித்து டிவிட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.


அதில்  வேலூரில்   காற்றுகள் உருவாகி வருகின்றன.  திசைமாற்றி காற்று நன்றாக இருக்கிறது,  இரவுக்குப் பிறகு சென்னைக்கு நகரலாம் என தெரிவித்துள்ளார். 
குமரி, திருநெல்வேலி  மற்றும் பெரியாறு நீர்ப்பிடிப்புப் பகுதிகளில்  அக்டோபர் மாதத்தில் அதிக மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் வட மாவடங்களில் அக்டோபரில் மழையின் அளவு குறையலாம்.  . கர்நாடகா மக்களில் சிலர் சென்னை மழையை ட்வீட் செய்து, தமிழகத்தில் அதிக மழை பெய்து வருவதாகவும், அவர்களுக்கு காவிரி நீர் தேவையில்லை எனவும்  தெரிவித்துள்ளார்,

மழை


இதுவரை பெய்த மழை அளவை பொறுத்தவரை சென்னை மற்றும் வடமாவட்டங்களில் மட்டுமே அதிக மழை பெய்துள்ளது  . காவிரியில் குறைவான மழையே பெய்துள்ளது, மேட்டூர் அணையின் நீர்மட்டம் 10 டிஎம்சி, இதில் 5 டிஎம்சி டெட் ஸ்டோரேஜ்  இருந்து வரும்  நிலையில் அக்டோபரில் நல்ல மழை பெய்தாலும் காவிரி நீர்ப்பிடிப்பு பெரும் பற்றாக்குறையில் முடிவடையும் என வெதர் மேன் தெரிவித்துள்ளார். இதனால் வேளாண் மக்கள் பெரும் வேதனையில் உள்ளனர். 

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாத மகிமைகள் , வழிபாடு, பலன்கள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாசம் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது?! அறிவியல் காரணம்...

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

From around the web