பொன்னான வாழ்வு தரும் புதன்கிழமை வழிபாடு!!
பொன்கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்பது பழமொழி. புதன்கிழமை வழிபாடு மிகவும் சிறப்பான பலன்களை தரவல்லது. ஒவ்வொரு வாரமும் புதன் கிழமைகளில் புதன் பகவானுக்கான ஆயில்யம், கேட்டை, ரேவதி நட்சத்திர நாட்களில்வீட்டில் விளக்கேற்றி வழிபடலாம். இதனால் தொழில் அமோகமாக சிறக்கும் என்பது ஆச்சார்ய பெருமக்கள் வாக்கு.
புதன் எப்போதும் சொல் புத்திகாரகன். சந்திரனின் மைந்தன் . சந்திரன் நம் மனதின் எண்ண ஓட்டத்திற்கு சொந்தக்காரன். புத்தியை நிலைப்படுத்துபவன். புதன் பகவானின் அதிதேவதை மகாவிஷ்ணு . புதன் கிழமைகளில் அவருக்கு விருப்பமான பச்சை வஸ்திரம் சாற்றி, பச்சைப்பயிறு நைவேத்தியம் படைத்து வழிபடலாம். புதன் கிழமைகளில் புதன் ஓரை நேரங்களில் அதாவது காலை காலை 6 முதல் 7 மணி வரையும் , இரவு 8 முதல் 9 மணி வரையும் புத பகவானை வழிபடலாம் என்கின்றனர் ஆச்சார்யர்கள்.
இத்தனை சிறப்பு வாய்ந்த புதன் கிழமைகளில், புதன் ஓரைகளில், வீட்டில் விளக்கேற்றி, புதபகவானை மனதார வேண்டிக்கொள்ள கல்வி , கேள்விகளில் சிறந்து விளங்கலாம். தொழிலில் நல்ல லாபம் பெருகும். சுபகாரியம் கைகூடும். குடும்பத்தில் அமைதி நிலவும். எடுத்த காரியத்தில் வெற்றி பெறலாம் என்பது ஆச்சார்ய பெருமக்கள் வாக்கு. மேலும் சிறப்பு பெற வழிபாட்டு நேரத்தில் சொல்ல வேண்டிய புதபகவான் காயத்ரி மந்திரம்:
புத பகவான் காயத்ரி:
ஓம் கஜத்வஜாய வித்மஹே
சுகஹஸ்தாய தீமஹி
தந்நோ புத ப்ரசோதயாத்;
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!