வாழ்க்கையை அர்த்தமாக்க வந்த மகளே வருக.. நெய்மர் நெகிழ்ச்சி பதிவு!!

 
நெய்மர்

பிரபல பிரேசில் கால்பந்து வீரர் நெய்மர். இவர் இன்ஸ்டாவில் பிரபலமாக வலம் வந்த புரூனா பியான்கார்டியை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.  இத்தம்பதிக்கு ஏற்கனவே, 12 வயதில் ஒரு மகன் உள்ளார். தற்போது    2 வதாக பெண் குழந்தை பிறந்துள்ளது.


 

இந்த குழந்தையின் புகைப்படத்தை    நெய்மர் இன்ஸ்டாவில் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.  இதனைத் தொடர்ந்து தற்போது தங்களுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளதாக தனது எக்ஸ் பக்கத்தில் மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார்.

நெய்மர்

அந்த பதிவில்  ’’எங்கள் வாழ்க்கையை அர்த்தமாக்க வந்த மகளே வருக வருக; எங்களை பெற்றோராக தேர்ந்தெடுத்தற்கு நன்றி’’ என குழந்தை மற்றும் மனைவியுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.   நெய்மரின் பதிவிற்கு சக விளையாட்டு வீரர்கள், தலைவர்கள், ரசிகர்கள், பிரபலங்கள் உட்பட பலரும் தங்களது வாழ்த்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாத மகிமைகள் , வழிபாடு, பலன்கள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாசம் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது?! அறிவியல் காரணம்...

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

From around the web