என்னத்தச் சொல்றது... பிராண்டட் தண்ணீர் பாட்டிலுக்குள் மிதக்கும் கரப்பான் பூச்சி! கவனம் மக்களே...

 
குடிநீரில்   கரப்பான் பூச்சி

எதில் தான் கலப்படமில்லை என்று புலம்பும் தலைமுறையில் வாழ்ந்து வருகிறோம் நாம். பெரிய ஹோட்டல், பிரபலமான உணவகம், வாட்டர் பாட்டில்ல தான் தண்ணீர் குடிப்பேன் என்று அடம்பிடிப்பவர்கள், சுகாதாரம் காப்பவர்களுக்கான செய்தி இது. எல்லா இடங்களிலும் கலப்படம் இருக்கத்தான் செய்கிறது.உஷாரா இருந்துக்கோங்க. கடந்த தலைமுறை வரை அருகில் இருக்கும் ஊருக்கு சென்றாலும், குறிப்பிட்ட வேலையாக ஒரு அலுவலகத்திற்கு சென்றாலும் அருகில் உள்ள வீட்டில் தாராளமாக தண்ணீர் வாங்கி குடிக்கலாம். அல்லது அனைத்து பொது இடங்களில் வைக்கப்பட்டிருந்த குழாய்களிலேயே குடிக்கும் தண்ணீர் வரும் . இதனை பிடித்து குடிக்கலாம். ஆனால் தற்போதைய நிலையே வேறு . எங்கு சென்றாலும் தண்ணீர் பாட்டில் காசுக்கு வாங்கிதான் குடிக்க வேண்டும்.

குடிநீரில்   கரப்பான் பூச்சி

அரசு சார்பில் விற்கப்படும் தண்ணீரோ, தனியார் கம்பெனியோ தண்ணீர் சுத்தமாக இருந்தால் போதும் என்ற நினைப்பில் காசு கொடுத்து வாங்க தயாராக உள்ளனர் ஆனால் அந்த தண்ணீரும் சுத்தமான நிலையில் கிடைப்பதில்லை என்பது தான் பெரும் வேதனை.திருவள்ளூரில் செயல்பட்டு வரும் குடிநீர் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்று   அக்வா நேச்சுரல்ஸ்.  

 செங்குன்றம் அடுத்த பாலவாயல் பகுதியில் வசித்து வருபவர் கரிக்கோல்ராஜ். இவர்  அங்கிருந்த கடை ஒன்றில் தாகத்திற்கு ரூ20 கொடுத்து அடைக்கப்பட்ட பாட்டில் குடிநீரை வாங்கி குடிக்கலாம் என பாட்டிலை திறந்தார்.  அந்த பாட்டில் குடிநீரில் கரப்பான் பூச்சி ஒன்று செத்து மிதந்து கொண்டிருந்தது.  இதனை கண்ட கரிக்கோல்ராஜ் மிகுந்த அதிர்ச்சியடைந்தார்.  

குடிநீரில் கரப்பான் பூச்சி

இது குறித்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளிடம் புகார் அளிக்கப்பட்டது. உடனடியாக அதிகாரிகள் மக்களின் உயிரை பாதுகாக்கும் வகையில் அதிரடி கள ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.  

கரப்பான் பூச்சி உயிரிழந்த நிலையில் குடிநீர் பாட்டிலில் இருக்கும் இந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதேபோல கடம்பத்தூர் ஒன்றியம் பன்னூர் கூட்டுச்சாலையில்  அங்கிருந்த கடை ஒன்றில் மேல்நல்லாதுரையில் வசித்து வரும் செல்வம் என்பவர் கூல் ட்ரிங்ஸ் வாங்கி குடித்துள்ளார். அப்போது அது காலாவதி ஆகி இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.  இதனையடுத்து மாவட்டத்தில் உள்ள குடிநீர் ஆலைகள், குளிர்பானங்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் மற்றும் விற்பனை செய்யும் கடைகளில் உரிய முறையில் ஆய்வு செய்திட வேண்டும் என அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web