பிக்பாஸ் நடிகை ஸ்ருதிகாவுக்கு என்னாச்சு? மருத்துவமனையில் அறுவை சிகிச்சை... வைரலாகும் வீடியோ!
பிக்பாஸ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமான நடிகை ஸ்ருதிகா, தற்போது மருத்துவமனையிலிருந்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தன் உடல்நிலை மற்றும் மேற்கொள்ளப்பட்ட முக்கிய அறுவை சிகிச்சை குறித்து பேசியுள்ளார்.
மறைந்த நடிகர் தேங்கா ஸ்ரீநிவாசனின் பேத்தியாகிய ஸ்ருதிகா, ஸ்ரீ, தித்திக்குதே, நளதமயந்தி உள்ளிட்ட சில படங்களில் நடித்தவர். பின்னர் சிறிது காலம் திரையுலகை விட்டு விலகி, தொழில் துறையில் கவனம் செலுத்தி வந்தார். அதன் பின்னர் குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு டைட்டில் வென்றார். அதன்பின் இவர் சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பைப் பெற்றார்.

அதனைத் தொடர்ந்து ஸ்ருதிகா, இந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் பங்கேற்று தேசிய அளவில் ரசிகர்களை பெற்றார். இந்நிலையில் தன்னுடைய உடல்நல பிரச்சனை காரணமாக பெரிய அளவிலான அறுவை சிகிச்சை செய்ததாக ஸ்ருதிகா வீடியோவில் தெரிவித்துள்ளார்.
“பல நாட்களாக உடலில் இருந்த பிரச்சனையுடன் வேலை செய்தேன். அதை சரிசெய்ய இப்போது மேஜர் சர்ஜரி நடந்தது” என தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இருப்பினும், எந்த பிரச்சனைக்காக சிகிச்சை எடுத்தார் என்பதைக் குறிப்பிடவில்லை. அவரது வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி, ரசிகர்கள் ஸ்ருதிகா விரைவில் நலம்பெற பிரார்த்தனை செய்து வருகின்றனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
