அச்சச்சோ... பதறும் ரசிகர்கள்... வினோத் காம்ப்ளிக்கு என்னாச்சு? அதிர்ச்சி வீடியோ

 
வினோத் காம்ப்ளி

!


இந்திய அணியின் எஃப் ஆர்மர் பேட்ஸ்மேன் வினோத் காம்ப்ளி கடுமையான உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் வினோத் காம்ப்ளி நடக்க முடியாமல்.. நிற்க கூட முடியாமல் தவிக்கும் வீடியோ வெளியாகி, கிரிக்கெட் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி கண்ணீரை வரவழைத்துள்ளது. அவரது உடல்நிலை கவலைக்கிடமாகவும் உள்ளது கிரிக்கெட் ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
 

இது குறித்து சமூக வலைத்தளங்களில் வெளியான வீடியோவில், வினோத் காம்ப்ளி சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளில் இருந்து தனியே நிற்க முடியாமல் சிரமப்படுவதைக் காணலாம். இருவர் உடனடியாக அவரை அணுகி, அவர் நடப்பதற்கு உதவி செய்கின்றனர். அங்கிருப்பவர்களின் உதவியுடனும் கூட நடப்பதற்கு மிகவும் சிரமப்படுகிறார் வினோத் காம்ப்ளி. இதயத்தை உடைக்கும் தருணமாக அந்த வீடியோ காட்சிகள் விரிகின்றன.
"முன்னாள் கிரிக்கெட் வீரர் வினோத் காம்ப்ளி சமீபத்திய ஆண்டுகளில் உடல்நலப் பிரச்சினைகள் மற்றும் தனிப்பட்ட பிரச்சனைகள் குறித்து தனது போராட்டங்களைப் பற்றி வெளிப்படையாகவே கூறியுள்ளார்.

வினோத் காம்ப்ளி

"இதயப் பிரச்சனைகள் மற்றும் மனச்சோர்வு உள்ளிட்ட பல்வேறு உடல்நலக் கவலைகள் காரணமாக அவர் பலமுறை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் விரைவில் குணமடைந்து அவருக்குத் தேவையான ஆதரவைப் பெறுவார் என்று நம்புகிறேன்!" என்று ட்விட்டரில் குப்தா பகிர்ந்துள்ளார். 
அந்த வீடியோவில் இருப்பது வினோத் காம்ப்ளி தானா? என்கிற சந்தேகத்தைக் கிளப்பும் வகையில் அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்திருப்பது ரசிகர்களை கண்ணீர் வரவழைத்துள்ளது.

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!