அவ தம் அடிச்சா உனக்கென்ன... வனிதா விஜயகுமார் காட்டம்!!

 
பிக்பாஸ் 7

 
பிக்பாஸ் சீசன் 7ல் சர்ச்சைகளும் சண்டைகளும் தொடங்கிவிட்டன. நிகழ்ச்சி தொடங்கி ஒரே வாரத்தில் பரபரப்புக்கு பஞ்சமில்லாமல்  போய்க்கொண்டிருக்கிறது. இதில் அதிகம் சலசலப்பை ஏற்படுத்தியது ஜோவிகா - விசித்ரா   மோதல் தான். ஜோவிகா தனக்கு படிப்பு வராததால் பள்ளிப்படிப்பை நிறுத்திவிட்டு பின்னர் நடிப்பு பயிற்சி எடுத்து அதில் டிப்ளமோ முடித்துள்ளதாக கூறினார். விசித்ரா குறைந்தது 12ம் வகுப்பு வரையாவது படிக்க வேண்டும் என அறிவுரை கூறினார்.   இதனால்கடுப்பான ஜோவிகா, படிப்பு தனக்கு வரவில்லை என்பதால் தான் அதை விட்டு விலகிவிட்டேன்.

வனிதா விஜயகுமார்

அதைப்பற்றி மீண்டும் மீண்டும் பேசுகிறீர்கள் என கத்தி சண்டைபோட்டார். இந்த சண்டைக்கு கமல்ஹாசன்  படிப்பு முக்கியம் தான் , அதே நேரம்   ஜோவிகாவின் பேச்சிலும் நியாயம் இருப்பதை சுட்டிக்காட்டினார். மகளின் பேச்சுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருவதால் வனிதா விஜயகுமார்  மகிழ்ச்சியில் திக்குமுக்காடி போயிருக்கிறார். இது குறித்து   யூடியூப்பில் பல்வேறு பேட்டிகளை கொடுத்து வருவதோடு, சமூக வலைதளங்களிலும் ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளித்து வருகிறார். அதுமட்டுமின்றி பிக்பாஸ் வீட்டில் இருக்கும் பெண்களிடம் டாட்டூ வெளியே தெரியும்படி குத்தக்கூடாது என விசித்ரா பேசியதையும் குறை கூறியுள்ளார்.  

ஜோவிகா

இது குறித்து   “பிக்பாஸ் வீட்ல இருக்குற பிள்ளைங்க எல்லாம் நீங்க பெத்த பிள்ளைங்க மாதிரி ஓவரா அக்கறை காட்டக்கூடாது. அவங்க டாட்டூ போடுறதையும், தம் அடிக்குறதையும் அவங்களோட  பெற்றோர் பார்த்துப்பாங்க. உங்களுக்கா  அந்த பிள்ளைங்களை எல்லாம் உங்களுக்கு நேந்து விட்டுருக்காங்களா? நீங்க 3 பசங்களுக்கு அம்மாவா இருக்கலாம். அதுக்காக மத்த பிள்ளைங்கள ஓவரா கரெக்‌ஷன் பண்ண அவசியமில்லை.   நீங்க எதுக்காக பிக்பாஸ் வீட்டுக்கு வந்தீங்களோ அந்த வேலையை மட்டும் பாருங்க. மத்தவங்க  விஷயத்துல மூக்கை நுழைக்காதீங்க” என காட்டமாக பதிலடி கொடுத்துள்ளார்  

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாத மகிமைகள் , வழிபாடு, பலன்கள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாசம் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது?! அறிவியல் காரணம்...

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

From around the web