உன் ரேட் என்ன?.. என் அப்பா டி.எஸ்.பி.. போதையில் எல்லைமீறிய இளைஞர்.. கதறிய இளம்பெண்!
சமீபகாலமாக குடிபோதை ஆசாமிகளின் தொல்லை அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிப்படைந்து வருகின்றனர். அந்த வகையில், உத்திரபிரதேச மாநிலம் நொய்டாவில் கார்டன் கேலேரியா மால் உள்ளது. ஒரு பெண் தன் கணவன் மற்றும் சகோதரனுடன் இங்கு சென்றுள்ளார். அப்போது ஒரு நபர் குடிபோதையில் மற்றொரு பெண்ணுடன் வந்துள்ளார். அப்போது, அந்தப் பெண்ணைப் பார்த்து உன்னுடைய ரேட் என்ன என்று கேட்டுள்ளார்.
नोएडा पुलिस फिर सवालों में घिरी
— Tricity Today (@tricitytoday) August 6, 2024
गार्डन गैलेरिया मॉल में युवकों ने युवती से कहा- अपना रेट बता, डीएसपी की बेटी ने दी धमकी @noidapolice @Uppolice #noidapolice pic.twitter.com/3RjnjJChZj
மேலும், என் அப்பா, மாமா எல்லாரும் டி.எஸ்.பி.க்கள்தான் என்றும் சொன்னார். இதனால் அந்த பெண்ணின் கணவருக்கும், வாலிபருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் மற்றொரு வீடியோவில் பாதிக்கப்பட்ட பெண் தனக்கு நடந்த கொடுமைகளை விவரித்து, முதல்வர் யோகி ஆதித்யநாத் பேசும் நீதி இதுதானா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா
