வாட்ஸ் அப்பில் அதிரடி மாற்றம்.. பயனர்கள் உற்சாகம்!

 
வாட்ஸ் அப்

தகவல் பரிமாற்ற செயலிகளில் உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்களை பெற்று முண்ணனியில் இருப்பது வாட்ஸ் அப் நிறுவனம். மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ்அப்  அவ்வப்போது புதுப்புது அம்சங்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் தற்போது வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் அம்சத்தில் புதிய மாற்றங்கள் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இத்தகவலால் பயனர்கள் பெரும் உற்சாகம் அடைந்துள்ளனர். அதன்படி மெட்டா நிறுவனம் தற்போது ஸ்டேட்டஸ் மெனுவில் புதிய UI -ஐ சோதனை செய்து வருகிறது.

வாட்ஸ் அப்

இதன் மூலம்  ஸ்டேட்டஸ் மற்றும் சேனல்ஸ் அப்டேட்களை ஓபன் செய்யமல் அப்படியே ப்ரிவியூ செய்து பார்க்கலாம். விருப்பமிருந்தால் மட்டும் ஓபன் செய்து பார்க்கும் வகையில்   புதிய அம்சம் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த அம்சம் தற்போது சோதனை அடிப்படையில் பீட்டா பயனர்களுக்கு மட்டும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பயனர்களிடம் பெரும் வரவேற்பின் அடிப்படையில் படிப்படியாக பரவலாக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம்  ஸ்டேட்டஸ் பார் ஸ்டோரிஸ் மற்றும் சேனல்களை எளிதாக பயன்படுத்தும் வகையில் வாட்ஸ்அப் சோதனை செய்கிறது. அந்த வகையில் புதிய அம்சத்தில் ஸ்டேட்டஸ்  rectangular format ல் இடம்பெறும் எனக் கூறப்படுகிறது.  

வாட்ஸ் அப்
சமீபத்தில்  அறிமுகம் செய்யப்பட்ட சேனல் அம்சம் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் பக்கத்தில் இடம் பெற்றதால் அது பயனர்களுக்கு சற்று சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் ஏற்கனவே பார்க்கப்பட்ட ஸ்டேட்டஸ்கள்  hide செய்யப்பட்டது.  இதனைக் கருத்தில் கொண்டு புதிய அம்சத்தை மேம்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

மாசி மாதத்துல இத்தனை விசேஷமா... இந்த நட்சத்திர தினங்களை மிஸ் பண்ணாதீங்க!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web