Whatsapp பயனர்களே... இந்த தகவல்களால் ஏமாறாதீங்க... சிபிஐ எச்சரிக்கை!
நாளுக்கு நாள் வளர்ந்து வரும் தொழில்நுப்ட வளர்ச்சி ஒரு புறம் வசதிகளை தந்தாலும் மறுபுறம் மோசடிகளும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதனையடுத்து மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.சைபர் க்ரைம் மோசடிகள் குறித்து அரசு என்னதான் விழிப்புடன் இருக்க மக்களை அறிவுறுத்தி வந்தாலும் மோசடிக்காரர்கள் தினமும் புதுவிதமான யுக்திகளை பயன்படுத்தி பலவிதமான மோசடிகளில் ஈடுபடுகிறார்கள்.

இந்நிலையில் வாட்ஸ் அப் பயன்படுத்துவோருக்கு சிபிஐ தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி சிபிஐ சின்னத்தையும் அதிகாரிகள் பெயர்களையும் பயன்படுத்தி மர்ம நபர்கள் போலி ஆவணம் தயாரித்து சம்மன் அனுப்புகின்றனர். அவர்களுக்கு whatsapp அழைப்பு மேற்கொண்டு மிரட்டி பணம் பறித்து வருவது அதிகரித்து வருகிறது. அதனால் போலி நபர்களிடம் ஏமாறாமல் இருக்க மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என சிபிஐ சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா
