பகீர் வீடியோ.. ராகுல் காந்தி சென்ற கார் மீது பயங்கர தாக்குதல்.. மர்ம நபர்கள் வெறிச்செயல்!

 
ராகுல் காந்தி

பாரத் ஒற்றுமை யாத்திரையின் அடுத்த கட்டமாக, மணிப்பூரில் பாரத் ஒற்றுமை நியாய யாத்திரையை காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தொடங்கி வைத்தார். மேற்கு வங்கத்தை தொடர்ந்து பீகார் மாநிலத்திலும் இந்த யாத்திரை தற்போது நடைபெற்று வருகிறது.  பீகார் மற்றும் மேற்கு வங்க எல்லைப் பகுதியில் இன்று ராகுல் காந்தி தனது ஒற்றுமை யாத்திரையைத் தொடங்கியபோது, ​​சில மர்மநபர்கள் அவரது கார் மீது தாக்குதல் நடத்தினர்.


கற்களை வீசியதாகவும் கூறப்படுகிறது. மேற்கு வங்க மாநிலம் மால்டா மாவட்டத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக ராகுல் காந்திக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இதனை மேற்கு வங்க மாநில காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கூறியதாக தனியார் செய்தி நிறுவனம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இதில் ராகுல் காந்தி காரின் பின்பக்க கண்ணாடி உடைந்தது.

Congress Rahul Gandhi - Bharat Jodo Nyay Yatra

மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ், இந்திய கூட்டணியில் அங்கம் வகித்தாலும் தனித்து போட்டியிடும் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். மேலும் பீகார் மாநிலத்தில் இந்தியாவின் கூட்டணியில் இருந்த முதல்வர் நிதிஷ்குமார் விலகி தற்போது பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க

From around the web