செப்டம்பர் 18 ஆ அல்லது 19 ஆ... விநாயகர் சதுர்த்தி எப்போது? நீடிக்கும் குழப்பம்!!

 
விநாயகர்

முழு முதற்கடவுள் விநாயகர் இவரை விரதம் இருந்து வழிபடுபவர்களுக்கு வேண்டிய வரம் அருளி நன்மைகள்  வழங்குவார் என்பது ஐதீகம். நவக்கிரக தோஷம், சர்ப்ப தோஷம்,  சனிதோஷம் என எந்த வகையான தோஷமாக இருந்தாலும்  சதுர்த்தி திதியில் விரதம் இருந்து விநாயகரை வழிபட்டால் சகல விதமான சங்கடங்களும் நீங்கும் . எல்லா மாதங்களிலு வரும் சதுர்த்தி திதி சிறப்பானது என்றாலும் ஆவணி மாதத்தில் வரும் சதுர்த்தி தனிச்சிறப்பு வாய்ந்தது.  

விநாயகர்

சதுர்த்தி விரதம் இருக்க தொடங்குபவர்கள் ஆவணி மாத வளர்பிறை சதர்த்தியில் தொடங்குவது மிகவும் சிறப்பு வாய்ந்தது.   ஆவணி மாத வளர்பிறை சதுர்த்தி திதியே விநாயகர் சதுர்த்தி. ஆனால் நடப்பாண்டை பொறுத்தவரை  புரட்டாசி மாதத்தில் வருகிறது.  புரட்டாசி மாதம் தொடங்கும் நாளிலேயே   விநாயகர் சதுர்த்தியும் இணைந்து வருவதால் இது கூடுதல் சிறப்பு வாய்ந்ததாக கொள்ளப்படுகிறது. தொடக்கம் முதலே விநாயகர் சதுர்த்தி குறித்த சர்ச்சை நிலவி வருகிறது. முதலில் செப்டம்பர் 17   தான் அரசு விடுமுறை என்றும், செப்டம்பர் 18  நாயகர் சதுர்த்தி என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. இதனால்   எந்த நாளில் விநாயகர் சதுர்த்தி விடுமுறை என்ற குழப்பம் ஏற்பட்டது. இதனால் தமிழக அரசு விநாயகர் சதுர்த்தி விடுமுறையை செப்டம்பர் 17 க்கு பதிலாக செப்டம்பர் 18 ம் தேதி மாற்றியது.

செப்டம்பர் 18 ம் தேதி  திங்கட்கிழமை  புரட்டாசி 1ம் தேதி விநாயகர் சதுர்த்தி என குறிப்பிடப்பட்டுள்ளது. அதே நேரம் செப்டம்பர் 19ம் தேதி   சதுர்த்தி என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் விநாயகர் சதுர்த்தி  செப்டம்பர் 18 ல் கொண்டாடுவதா அல்லது 19 ம் தேதி கொண்டாடுவதா  என குழப்பம் நீடிக்கிறது. இது குறித்து ஜோதிட நிபுணர்கள்  “ சதுர்த்தி திதியானது செப்டம்பர் 18ம் தேதி காலை காலை 11. 39 மணிக்கு துவங்கி, செப்டம்பர் 19 ம் தேதி காலை 11.50 வரை  நீடிக்கிறது.  விநாயகர் சதுர்த்தி பூஜையை  மாலையில் செய்வதே சிறப்பு. மாலையில் விநாயகரை வழிபட்ட பிறகு சந்திர தரிசனம் செய்து, விரதத்தை நிறைவு செய்ய வேண்டும் என்பது தான் தாத்பர்யம்.

விநாயகர் உயர்நீதிமன்றம்

அதன்படி  செப்டம்பர் 19 ம் தேதி காலை 11.50 வரை மட்டுமே சதுர்த்தி திதி. அதன் பிறகு   பஞ்சமி திதி வந்து விடுகிறது. ஆனால் செப்டம்பர் 18 ம் தேதி காலை 11.39 மணிக்கு பிறகே சதுர்த்தி திதி தொடங்கி விட்டாலும்   மறுநாள் வரை உள்ளது. இதனால் செப்டம்பர் 18 ம் தேதி நாளையே விநாயகர் சதுர்த்தி நாளாக கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்.  விரதம் இருந்து வழிபட வேண்டும். மாலையில் விநாயகர் பூஜைகளை நிறைவு செய்த பிறகு, சந்திர தரிசனம் செய்து விரதத்தை நிறைவு செய்து கொள்ளலாம் என்கின்றனர் ஜோதிட வல்லுனர்கள்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web