'நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்'.. படத்தின் முதல் வெளியானது.. சிறப்பு தோற்றத்தில் பிரியங்கா மோகன்!

 
நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்

நடிகர் தனுஷ் இயக்கியுள்ள 'நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்' படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது. நடிகர் தனுஷ் இயக்கி நடித்த ‘ராயன்’ படம் ரூ.100 கோடி வரை வசூல் செய்து மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. இதையடுத்து அவர் இயக்கத்தில் அடுத்ததாக ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ படம் தயாராக உள்ளது.

தனுஷின் சகோதரி மகன் பவிஷ் ஹீரோவாக நடிக்கும் இப்படத்தில் அனிகா சுரேந்திரன், பிரியா பிரகாஷ் வாரியர், மேத்யூ தாமஸ், வெங்கடேஷ் மேனன் மற்றும் பலர் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இப்படத்தின் முதல் பாடலான 'கோல்டன் ஸ்பேரோ' பாடலை படக்குழுவினர் இன்று வெளியிட்டுள்ளனர்.

தனுஷ், இந்து, சுபலாஷினி, ஜி.வி.பிரகாஷ் ஆகியோர் பாடிய இந்தப் பாடலை இந்து எழுதியுள்ளார். இந்த பாடலுக்கு நடிகை பிரியங்கா மோகன் சிறப்பு தோற்றத்தில் நடனமாடியுள்ளார். இப்படம் விரைவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web