மார்கழி மாதம் ஏன் திருமணம் செய்யக்கூடாது... பிரமிக்க வைக்கும் விஞ்ஞான உண்மைகள்!

 
திருமணம் குழந்தை

மார்கழி மாதம் என்பது வானுலகில் தேவர்கள் துயில் எழும் மாதம் என்பார்கள். இந்த மார்கழி மாதத்தில் அதிகாலையில் எழுந்து ஆலய வழிபாடு செய்ய வேண்டும் என்பது எல்லாம் நமக்கு தெரிஞ்ச விஷயம் தான். இப்படி புனிதமான மாதத்தில், ஏன் திருமணங்கள் போன்ற சுப நிகழ்ச்சிகளைத் தவிர்க்க வேண்டும் என்கிறார்கள்?

மார்கழியில் ஏன் திருமணம் செய்யக் கூடாது?? உண்மை தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!

மார்கழி மாதத்தில் தான் வைகுண்ட ஏகாதசி, ஆருத்ரா தரிசனம் என இறைவனை அடையும் விழாக்கல் அனுசரிக்கப்படுகின்றன. மார்கழி மாதம் என்பதை ‘பீடை மாதம்’ என்று ஒதுக்கி வைத்து கொண்டிருக்கிறோம். உண்மையில் மார்கழி மாதம் ‘பீடை மாதம்’ கிடையாது. பீடு உடைய மாதம் என்பதையே திரித்து பீடை மாதம் என்கிறோம். பீடு என்றால் பெருமை உடைய மாதம். அதனால் தான் கிருஷ்ணர் மாதங்களில் நான் மார்கழி என்கிறார்.

சிறப்புடைய இந்த மாதத்தில் இறை சிந்தனை மேலோங்க வேண்டும். கிராமங்களில் இந்த மாதத்தில் விதை விதைக்கக் கூடாது என்ற சொலவடை உண்டு. இந்த மாதத்தில் விதைத்தால், விதை சரியான உயிர் தன்மையற்று வளராமல் போய் விடும். அதே காரணத்தால் தான் மார்கழி மாதத்தில் திருமணம் செய்யக் கூடாது என்று நம் முன்னோர்கள் வகுத்து சொல்லி வைத்தனர். குலம் தழைக்க வேண்டும் என்கிற அக்கறையும், நம் சந்ததி சந்தோஷமாக வாழ வேண்டும் என்கிற அன்பும் தான் காரணம்.

மார்கழியில் ஏன் திருமணம் செய்யக் கூடாது?? உண்மை தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!

ஆடி மாதம் அம்பிகைக்குரிய மாதம். அதே போல, மார்கழி மாதம் இறைவனுக்குரிய மாதம். இந்த மாதங்களில் இறை சிந்தனையை தவிர வேறு சிந்தனை கூடாது என்பதாலும் திருமணம் செய்யப்படுவதில்லை. மார்கழி மாதத்தில் அதிகாலை எழுந்து குளித்து வெளியில் வரும் போது, அந்த பிரம்ம முகூர்த்த நேரத்தில் காற்றில் ஓசோன் அதிகமாக இருக்கும். இயற்கையாகக் கிடைக்கக் கூடிய இந்த அதீத ஆக்ஸிஜன் உடலுக்கு முழுவதும் தேவையான நலனை தந்து விடும். இதனால் தான் மார்கழி மாதம் அதிகாலை, சூரிய உதயத்திற்கு முன்பாக குளித்துவிட வேண்டும் என சொல்லப்படுகின்றது.

ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை மாதம் சொல்ல வேண்டிய ஸ்லோகம்

தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாதம் சிறப்புக்கள்

கார்த்திகை பொறந்துடுச்சு... ஐயப்ப பக்தர்களுக்கு சபரிமலை சிறப்புக்கள்!

சபரிமலைக்குச் செல்பவர்கள் தினமும் சொல்ல வேண்டிய ஐயப்பன் ஸ்லோகம்!

From around the web