வேலைக்கு போகாத கணவன் ... மனைவி விஷமருந்தி தற்கொலை !

 
தஞ்சாவூர்


 
தஞ்சாவூர் மாவட்டத்தில்  திருநகர் எக்ஸ்டென்ஷன் வெங்கடேசபுரம் பகுதியில் வசித்து வருபவர் 45 வயது  சுரேஷ் பாபு.  இவரது மனைவி அமுதா. இந்நிலையில் சுரேஷ்பாபு வேலைக்கு செல்லாமல் இருந்து வந்தார்.  இதனால் கணவன், மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது.  நேற்று முன்தினம் இது குறித்து மீண்டும் அமுதாவிற்கும், சுரேஷ்பாபுவிற்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது.   

ஆம்புலன்ஸ்


நேற்று அதிகாலை எழுந்த சுரேஷ் பாபு தன் மனைவி பேச்சு மூச்சின்றி கிடப்பதை பார்த்த அதிர்ச்சி அடைந்தார். அப்போதுதான் அமுதா விஷம் குடித்தது தெரியவந்துள்ளது. இதில் பயந்துபோன சுரேஷ்பாபுவும், விஷம் குடித்து மயங்கி விழுந்தார். காலை வெகு நேரமாகியும் இவர்கள் வீட்டு கதவு திறக்கப்படாதால் அக்கம் பக்கத்தினர் சந்தேகம் அடைந்து கள்ளப்பெரம்பூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது அமுதா உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.  ’

போலீஸ்

சுரேஷ்பாபு உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்தார். உடனே அவரை சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
தகவலின் பேரில் விரைந்து  வந்த போலீசார் அமுதாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்நிலையில்  மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த சுரேஷ் பாபுவும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து  போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் தஞ்சாவூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?