கணவனை கொன்று வீட்டு வாசலில் புதைத்த மனைவி... 2 மகள்களும் கைது!
புதுக்கோட்டை மாவட்டத்தில் கணவனை கொன்று வீட்டின் வாசலில் புதைத்த மனைவியையும், இரு மகள்களையும் போலீசார் கைது செய்து மேற்கொண்டு விசாரனை நடத்தி வருகின்றனர்.
புதுக்கோட்டை திருமயம் அருகே உள்ள மல்லாங்குடி கிராமத்தைச் சேர்ந்த பழனிவேல் (55). கூலித்தொழிலாளியான இவரது மனைவி மகாலட்சுமி (43). இவர்களின் இரண்டு மகள்கள் தமிழ்செல்வி (25) மற்றும் சாரதா (20). மகாலட்சுமியின் நடத்தையில் சந்தேகம் கொண்ட பழனிவேல் அடிக்கடி மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த மாதம் 8ம் தேதி முதல் பழனிவேல் வீட்டுக்கு வரவில்லை. அக்கம்பக்கத்தினர் இது குறித்து கேட்டபோது, “அவர் கொழுப்பு கட்டியைக் கரைப்பதற்காக கோயம்புத்தூர் மருத்துவமனையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருகிறார்” என மகாலட்சுமி கூறியிருந்தார். ஆனால் பழனிவேலுவின் சகோதரி காவேரி, இது குறித்து சந்தேகமுற்று நமணசமுத்திரம் காவல் நிலையத்தில், தனது சகோதரரைக் காணவில்லை என்று புகார் அளித்தார்.

போலீசாரின் விசாரணையில், கடந்த மாதம் 8ம் தேதி இரவில் நடந்த தகராறில், மகாலட்சுமி கோபத்தில் கட்டையால் தாக்கியதில் பழனிவேல் உயிரிழந்தது வெளிச்சத்துக்கு வந்தது. பின்னர் அவரது மகள்கள் இருவரும் சேர்ந்து பழனிவேலின் உடலை வீட்டு வாசலில் குழி தோண்டி புதைத்ததாக விசாரணையில் தெரிய வந்தது.
போலீசார் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துவிட்டு, மகாலட்சுமி மற்றும் மகள்கள் தமிழ்செல்வி, சாரதா ஆகிய மூவரையும் கைது செய்தனர். இந்த சம்பவம் மல்லாங்குடி கிராமத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
