அதிமுக முன்னாள் மாவட்டக் கவுன்சிலரின் மனைவி கொலை!
கோவையில் அதிமுக முன்னாள் மாவட்டக் கவுன்சிலரின் மனைவி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொலையை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட ஓட்டுநர் காவல்துறையில் சரணடைந்துள்ளார்.

கோவை பன்னீர்மடை ஊராட்சி முன்னாள் தலைவரும் அதிமுக முன்னாள் மாவட்டக் கவுன்சிலருமான கவிசரவணகுமார், தனது மனைவி மகேஸ்வரி (47) மற்றும் இரண்டு குழந்தைகளுடன் தாளியூரில் வசித்து வந்தார். இவர்களின் வீட்டில் 45 வயதான சுரேஷ் என்ற நபர் ஓட்டுநராக பணியாற்றி வந்தார். புதன்கிழமை காலை கவிசரவணகுமார் வெளியில் சென்றிருந்தார்; குழந்தைகளும் பள்ளி, கல்லூரிக்கு சென்றிருந்தனர். அப்போது வீட்டில் தனியாக இருந்த மகேஸ்வரியை, சுரேஷ் கத்தியால் குத்திக் கொலை செய்துவிட்டு வடவள்ளி காவல் நிலையத்தில் சரணடைந்தார்.

தகவல் அறிந்த தடாகம் காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று மகேஸ்வரியின் உடலை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக அனுப்பினர். சம்பவம் குறித்து உறவினர்கள், அப்பகுதி மக்கள் பெருமளவில் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கொலைக்கான காரணம் குறித்து சுரேஷிடம் காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!
