நன்றாக சம்பாதிக்கும் மனைவிக்கு ஜீவனாம்சம் தேவையில்லை... உயர்நீதிமன்றம் தீர்ப்பு!
கணவன்-மனைவிக்கிடையிலான கருத்து வேறுபாட்டால் ஏற்பட்ட விவாகரத்து வழக்கில், நிதி ரீதியாக தன்னிறைவு பெற்ற மனைவிக்கு நிரந்தர ஜீவனாம்சம் வழங்கத் தேவையில்லை என டெல்லி உயர்நீதிமன்றம் முக்கிய தீர்ப்பளித்துள்ளது.
டெல்லியைச் சேர்ந்த வழக்கறிஞர் ஒருவரும், இந்திய ரயில்வேயின் ‘குரூப்-ஏ’ அதிகாரியாக பணியாற்றும் பெண்ணும் 2010-ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். ஆனால் 14 மாதங்களுக்குள் மன, உடல் காயங்கள் உள்பட தகராறுகள் காரணமாக உறவு முறிந்ததால், கணவர் குடும்ப நீதிமன்றத்தில் விவாகரத்து கோரினார்.

விவாகரத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த மனைவி, பின்னர் நிரந்தர ஜீவனாம்சத்தையும் கோரினார். விசாரித்த குடும்ப நீதிமன்றம் கணவரின் கோரிக்கையை ஏற்று விவாகரத்து வழங்கி, மனைவியின் ஜீவனாம்சக் கோரிக்கையை நிராகரித்தது.
இந்த தீர்ப்பை எதிர்த்து மனைவி மேல்முறையீடு செய்த நிலையில், நீதிபதிகள் அனில் ஷேத்ரபால் மற்றும் ஹரிஷ் வைத்தியநாதன் சங்கர் தலைமையிலான அமர்வு வழக்கை விசாரித்தது. விசாரணையின் போது, விவாகரத்துக்கு ஒப்புதல் அளிக்க மனைவி ரூ.50 லட்சம் கோரியிருந்ததும் வெளிச்சத்துக்கு வந்தது.

இதனை கருத்தில் கொண்ட நீதிமன்றம், “உண்மையிலேயே நிதி உதவி தேவைப்படுபவர்களுக்கே ஜீவனாம்சம் வழங்கப்பட வேண்டும். இங்கு மேல்முறையீட்டாளர் நிதி ரீதியாக நிலையானவர். குறுகிய காலமே இணைந்து வாழ்ந்துள்ளனர். குழந்தைகளும் இல்லை. எனவே ஜீவனாம்சத் தேவையில்லை” என்று தீர்மானித்தது. இதனால் குடும்ப நீதிமன்றத் தீர்ப்பு மாற்றமின்றி நிலைநிறுத்தப்பட்டது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
