குளிர்காலத்திற்கான தரிசனம் நிறைவு... கேதார்நாத் கோயில் நடை அடைக்கப்பட்டது!
உத்தரகண்ட் மாநிலம், ருத்ரபிரயாக் மாவட்ட மலைத் தொடரில் அமைந்துள்ள சார்தாம் யாத்திரையின் முக்கிய தலமாகிய கேதார்நாத் சிவன் கோயில், வருடாந்திர மரபுப்படி குளிர்காலத்தை முன்னிட்டு நேற்று அதிகாரப்பூர்வமாக நடை அடைக்கப்பட்டது.

கோடைகால தொடக்கத்தில் பக்தர்களுக்கு திறக்கப்படும் இந்த புகழ்பெற்ற யாத்திரைத் தலம், பனிப் பொழிவு அதிகரிக்கும் குளிர் சீசன் தொடங்கும்போது வழக்கமான முறையில் மூடப்படுகிறது. இதற்கமைய, நேற்று அதிகாலை சிறப்பு பூஜை நடைபெற்றது. மரபுப்படி நடைபெற்ற இந்த இறுதி தரிசன நிகழ்வில் உத்தரகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி, கோயில் நிர்வாக அதிகாரிகள், அர்ச்சகர்கள் மற்றும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.
கோயில் நடை அடைக்கப்பட்டதையடுத்து, கேதார்நாத் பகவானின் உற்சவ மூர்த்தி குளிர்கால வசதிக்காக உகிமத் நகரில் உள்ள ஓம் காரேஷ்வர் கோயிலுக்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கு ஆறுமாத காலத்திற்கு வழிபாட்டிற்கு வைக்கப்படும்.

இந்த ஆண்டுக்கான சார்தாம் யாத்திரை வெற்றிகரமாக முடிவடைந்ததாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர். பனிப்பொழிவு தொடங்கும் நிலையில், மலைப்பகுதிக்குச் செல்வோர் பாதுகாப்பு காரணங்களுக்காக மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
