டிசம்பர் 1 முதல் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் !
இந்தியாவில் ஆண்டுதோறும் மூன்று முறை — பட்ஜெட், மழைக்காலம் மற்றும் குளிர்காலம் — என நாடாளுமன்ற கூட்டத்தொடர்கள் நடைபெறும். ஆண்டு தொடக்கத்தில் நடைபெறும் பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனாதிபதி உரையுடன் தொடங்கி, நிதி மசோதாக்கள், மானியக் கோரிக்கை விவாதங்கள், பட்ஜெட் நிறைவேற்றம் போன்ற முக்கிய அம்சங்களை உள்ளடக்கியதாக இருக்கும். இதையடுத்து மழைக்காலம், பின்னர் ஆண்டின் இறுதியில் குளிர்கால கூட்டத்தொடர் நடைபெறும்.

இந்த ஆண்டுக்கான நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் 1 முதல் டிசம்பர் 19 வரை நடைபெறும் என்று மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ அறிவித்துள்ளார். குளிர்கால கூட்டத்தொடருக்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த கூட்டத்தொடரில் பல முக்கிய மசோதாக்களை மத்திய அரசு நிறைவேற்றத் திட்டமிட்டுள்ளது.

மறுபுறம், எதிர்க்கட்சிகள் எஸ்.ஐ.ஆர். விவகாரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை எழுப்பத் தயாராகி வருகின்றன. இதனால், வரும் குளிர்கால கூட்டத்தொடர் கடும் விவாதங்களும் அரசியல் தாக்கங்களும் நிறைந்ததாக அமைய வாய்ப்புள்ளது என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!
