பிரபல ஹோட்டலில் கால் மேல் கால் போட்டு சாப்பிட பெண்ணுக்குத் தடை!

 
ஷ்ரத்தா
 

டெல்லி தாஜ் ஓட்டலில் ஷ்ரத்தா சர்மா என்ற பெண் உணவு அருந்தச் சென்றார். அப்போது, கால் மேல் கால் போட்டு அமர்ந்திருந்ததை கவனித்த ஓட்டல் மேலாளர், மற்ற விருந்தினர்களுக்கு சங்கடம் ஏற்படக்கூடும் எனக் கூறி, அப்படி அமர வேண்டாம் என அறிவுறுத்தியதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த அனுபவத்தை ஷ்ரத்தா சர்மா தனது இணையதளத்தில் பகிர்ந்துள்ளார். அதில், “சொந்தமாக பணம் சம்பாதித்து, தாஜ் ஓட்டலில் சாப்பிடச் செல்லும் ஒரு சாதாரண பெண் என்ற வகையில் என்னை அவமானப்படுத்தினர். என் தவறு என்ன? நான் வழக்கமான பத்மாசன பாணியில் அமரக்கூடாதா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

அவரது பதிவுக்கு சமூக வலைதளங்களில் பெரும் எதிர்வினை எழுந்துள்ளது. சிலர் அவருக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளதுடன், மற்றொருபக்கம் ஓட்டல் விதிமுறைகளை மதிக்க வேண்டும் என சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!