வெண்டிலேட்டர் இயங்காததால் பெண் மூச்சுத்திணறி பலி... அண்ணாமலை ஆவேசம்...!!

 
அமராவதி

தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் தொடர்மழை பெய்து வருகிறது. இதனால் பல நேரங்களில் கிராமப்புறங்களில் மின்வெட்டும் தொடர்கிறது. அந்த வகையில் திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அமராவதி என்ற 50 வயதை உடைய பெண் நுரையீரல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்தார். கடந்த 2 நாட்களாக  மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த பெண்   நுரையீரல் சிகிச்சைக்காக   அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார்.


நுரையீரல் பிரச்சினை காரணமாக  மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் இவருக்கு  வென்டிலேட்டர் மூலமாக சுவாசம் செலுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில்  நேற்று பிற்பகல்  திடீரென அரை மணி நேரத்திற்கும் மேலாக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள அவசர சிகிச்சை பிரிவில் மின்சாரம் தடைபட்டது. இதனால் அமராவதிக்கு கடும் மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதனால் வென்டிலேட்டர் இயங்கவில்லை. இதனால் தான் அவர்  மரணம் அடைந்ததாக  அவருடைய உறவினர்கள் குற்றம்சாட்டுகின்றனர். இது குறித்து அவர்  மருத்துவர்களிடம் கேட்ட போது, மருத்துவமனை நிர்வாகத்திடம் கேட்குமாறு அலட்சியமாக பதிலளித்ததாக  உறவினர்கள் தெரிவித்தனர்.  

திருவாரூர்

இந்த விவகாரம்தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து பாஜக மாநிலத்தலைவர்  அண்ணாமலை, “திமுக ஆட்சியில், ஏழை, எளிய மக்கள் சிகிச்சை பெறும் அரசு மருத்துவமனைகள், எத்தனை துச்சமாக நடத்தப்படுகின்றன என்பதை இந்தத் துயரச் சம்பவம் மீண்டும் உணர்த்தியிருக்கிறது.அரசு மருத்துவமனைகள் இத்தகைய அவல நிலையில் தான் செயல்பட்டு வருகின்றன.  தமிழக மருத்துவக் கட்டமைப்பை ஐரோப்பிய நாடுகளுடன் தான் ஒப்பிட வேண்டும் என்று வெட்கமே இல்லாமல் முதல்வர் மேடைக்கு மேடை கூறுகிறார்”என ஆவேசமாக பதிவிட்டுள்ளார்.  

ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை மாதம் சொல்ல வேண்டிய ஸ்லோகம்

தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாதம் சிறப்புக்கள்

கார்த்திகை பொறந்துடுச்சு... ஐயப்ப பக்தர்களுக்கு சபரிமலை சிறப்புக்கள்!

சபரிமலைக்குச் செல்பவர்கள் தினமும் சொல்ல வேண்டிய ஐயப்பன் ஸ்லோகம்!

From around the web