நாட்டையே உலுக்கிய பெண் டாக்டர் பலாத்கார கொலை சம்பவம்... குற்றவாளி சஞ்சய் ராயின் மருமகள் மர்ம மரணம்!

 
கொல்கத்தா மருத்துவர்

நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய கொல்கத்தா பெண் மருத்துவர் பலாத்கார, கொலை சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ள குற்றவாளி சஞ்சய் ராயின் மருமகள் மர்மமான முறையில் மரணமடைந்த சம்பவம் தொடர்பாக போலீசார் சிறுமியின் வளர்ப்பு பெற்றோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

கொல்கத்தாவின் பவானிப்பூர் பகுதியில் 11 வயது சிறுமி சுரஞ்சனா சிங் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் மக்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. போலா சிங் மற்றும் அவரது மனைவி பூஜா வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சிறுமியின் சடலத்தை மீட்டுள்ளனர். போலீசார் ஆரம்ப விசாரணையில் இதனை தற்கொலை எனக் கண்டனர். ஆனால், கொலை சாத்தியமற்றது அல்ல என்றும் தெரிவித்துள்ளனர். சிறுமியின் மரண காரணத்தை உறுதிப்படுத்த தடய அறிவியல் அறிக்கை முடிவுக்காக காத்திருக்கிறார்கள்.

கொல்கத்தா

சுரஞ்சனா சிங்கின் வளர்ப்பு தாய் பூஜா மற்றும் தந்தை போலா, சிறுமியை மனதளவிலும் உடலளவிலும் அடித்து துன்புறுத்தி வந்ததாக பகுதியினர் கூறுகின்றனர். இரவு நேரமும் சிறுமியை தாக்கும் பழக்கம் இருந்தது என பக்கத்து வீட்டுக்காரர்கள் குற்றச்சாட்டு அளித்துள்ளனர். சம்பவம் கடந்த ஆண்டு கொல்கத்தாவில் நடந்த பெண் டாக்டர் பலாத்காரம் மற்றும் கொலை சம்பவத்தை நினைவுபடுத்துகிறது; அதில் குற்றவாளியான சஞ்சய் ராய் சிறையில் அடைக்கப்பட்டு ஆயுள் தண்டனை அனுபவித்து வருகிறார்.

கொல்கத்தா மருத்துவர்

இந்த சம்பவத்துக்குப் பிறகு சிறுமியின் வளர்ப்பு பெற்றோர்கள் தப்பி ஓட முயன்றதை பக்கத்து வீட்டுக்காரர்கள் தடுத்து நிறுத்தியதாக போலீசார் தெரிவித்தனர். சமூக பாதுகாப்பு, சிறுமிகள் பாதுகாப்பு போன்ற விவகாரங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, போலீசார் விசாரணையை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?