பாக்ஸர் நாய் துரத்தி கடித்ததில் இளம்பெண்ணின் காது கிழிந்து கொட்டிய ரத்தம்... !

 
பாக்ஸர் பாக்ஸர்
 


 
சென்னை ராஜா அண்ணாமலைபுரம் குட்டி கிராமணி தெருவில் வசித்து வருபவர் 45 வயது உஷா. இவர் அந்த பகுதியில் வீட்டு வேலை செய்து வந்தார்.  வழக்கம் போல் நேற்று முன்தினம் மாலை தனது வீட்டில் இருந்து வேலைக்கு செல்வதற்காக  நடந்து சென்று கொண்டிருந்தார். இவரது வீட்டின் அருகே வசித்து வரும் குமார்  பாக்ஸர் வகை நாயை வளர்த்து வருகிறார். 

நாய்

உஷா சாலையில் நடந்து சென்ற போது, திடீரென அந்த நாய் உஷா மீது பாய்ந்து, அவரது சேலையை கடித்து இழுத்து கீழே தள்ளி கடிக்க முயற்சித்தது . உடனடியாக  நாயின் உரிமையாளர் குமார், ஓடிவந்து தனது நாயை கட்டுப்படுத்தினார். 

அப்போது நாயின் முன்கால் நகம் உஷாவின் இடது காதில் உள்ள கம்மலில் சிக்கியதால், உஷாவின் காது கிழிந்தது. உடனே அவரை நாயின் உரிமையாளர் குமார் மீட்டு மயிலாப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து உஷா,  காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில்  போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?