3 வது மாடியிலிருந்து கீழே விழுந்த பெண்… பகீர் சிசிடிவி காட்சிகள்!
மகாராஷ்டிரா மாநிலத்தில் தானே மாவட்டத்தில் டோம்பிளி நகர் அமைந்துள்ளது. இங்குள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் தனியார் நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் தூய்மைப்பணியாளராக தேவி என்பவர் பணிபுரிந்து வந்துள்ளார். இவர் வழக்கமான வேலைகளை முடிந்த பிறகு தன்னுடைய சக ஊழியர் ஒருவருடன் பேசிக் கொண்டிருந்தார்.
A woman died after falling from the third floor while joking with friends in Dombivali, Mumbai. The incident was captured on CCTV camera. pic.twitter.com/OIwPzd29N2
— BIO Saga (@biosagain) July 17, 2024
அப்போது தேவி 3-வது மாடி சுவரின் மேல் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார். எதிரில் நின்றுக் கொண்டே பேசிக்கொண்டிருந்த சக ஊழியர் விளையாட்டுக்காக தேவியை கட்டிப்பிடிக்க முயன்றார். அப்போது எதிர்பாராத விதமாக தேவி மாடியிலிருந்து தவறி கீழே விழுந்துவிட்டார். அவரை சக ஊழியர் பிடிக்க முயன்ற நிலையில் அவரது முயற்சி பலன் அளிக்கவில்லை. இந்நிலையில் படுகாயங்களுடன் தேவியை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே தேவி உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் தற்போது இச்சம்பவம் குறித்த சிசிடிவி வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது
ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா
