பைக் மோதி பெண் பலி...!! மகளுக்கு திருமணம் நடக்க இருந்த நிலையில் சோகம்!!

 
பைக் விபத்து

திண்டுக்கல் மாவட்டம் நத்தம்   ஊராளிப்பட்டியில் வசித்து வருபவர்   ஆரோக்கியசாமி. இவருக்கு வயது 48. நத்தம் செல்லம்புதூர் பகுதியில் பழைய இரும்பு கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி ஜெயந்தி . இவர்களின் மகளுக்கு 2  நாட்களில் திருமணம் நடைபெற உள்ளது. இந்த  திருமணத்திற்காக  நத்தம் அம்மன்குளம் அருகில் உள்ள மொத்த பலசரக்கு கடையில் மளிகை பொருட்கள் வாங்கிக் கொண்டு வெளியே வந்தனர். 

விபத்து


அப்போது நத்தத்தில் இருந்து மெய்யம்பட்டி நோக்கி இருசக்கர வாகனத்தில்  சூரியபிரசாத் சென்று கொண்டிருந்தார்.   கூலி தொழிலாளி மோதிய விபத்தில் 3 பேர்  படுகாயம் அடைந்தனர்.  அக்கம் பக்கத்தினர் மீட்டு  அரசு மருத்துவமனைக்கு  சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் படுகாயம் அடைந்த ஜெயந்தி மேல் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஜெயந்தி   சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

ஆம்புலன்ஸ்


படுகாயம் அடைந்த ஆரோக்கியசாமி மேல் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கும், சூரியபிரகாஷ் மதுரை அரசு மருத்துவமனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மகளுக்கு  2 நாட்களில்  திருமணம் நடைபெற இருந்த நிலையில் விபத்தில் தாய் உயிரிழந்த சம்பவம்  அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும்,  சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை