காவல் நிலையம் முன் பெண் தீக்குளிக்க முயற்சி: தூத்துக்குடியில் பரபரப்பு!
தூத்துக்குடியில் காவல் நிலையம் முன் இளம்பெண் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
தூத்துக்குடி ரோச் காலனியை சேர்ந்தவர் பிரியா (35). இவரது கணவர் கப்பலில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். பிரியாவுக்கும், அவரது உறவினர் ஒருவருக்கும் இடையே சொத்து பிரச்சினை இருந்துள்ளது. இது தொடர்பாக பிரியா தென்பாகம் காவல் நிலையத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு புகார் அளித்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தியதோடு, இருதரப்பையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி அனுப்பி வைத்துள்ளனர்..

இந்நிலையில், நேற்று தென்பாகம் காவல் நிலையத்துக்கு வந்த பிரியா, தன் உடலில் பெட்ரோலை ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றுள்ளார். பணியிலிருந்த போலீசார் பிரியாவை தடுத்து நிறுத்தி அவரைக் காப்பாற்றியுள்ளனர். இதையடுத்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

அதில், பிரியா கூறும்போது, ‘‘தற்போது நான் குடியிருக்கும் வீட்டை காலி செய்யுமாறு உறவினர் வற்புறுத்துகிறார். இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார். இதுகுறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதியளித்தனர். தூத்துக்குடியில் காவல் நிலையம் முன்பு இளம்பெண் தீக்குளிக்க முயன்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
