பெண்களே உஷார்... சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் நகைப்பறிப்பு... !
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே கோவிந்தபுரத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் நடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. ஒரு பெண் செல்போனில் பேசிக்கொண்டபடி சாலையில் நடந்து சென்றபோது, பைக்கில் வந்த இருவர் அவரிடம் இருந்து நகையை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர்.

பறிக்கப்பட்டது கவரிங் நகை என்றாலும், சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து, அருகிலுள்ள சிசிடிவி காட்சிகளைப் பெற்று விசாரணை நடத்தினர். அதில் நகை பறிப்பு சம்பவத்தில் கேரளாவைச் சேர்ந்த இருவர் தொடர்புடையவர்கள் என உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து போலீசார், கேரளாவைச் சேர்ந்த கோகுல் தாஸ் (26) மற்றும் அமல் (25) ஆகிய இருவரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து நகை மீட்கப்பட்டதுடன், கைது செய்யப்பட்ட இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
