அதிர்ச்சி.. பாலத்தின் கீழ் மர்மமான முறையில் எரிந்து கிடந்த இளம்பெண்.. தீவிர விசாரணையில் போலீசார்..!

 
கொள்ளிடம் பாலம்

திருச்சி மாவட்டம் அருகே கொள்ளிடம் ஆற்றங்கரையில் கிடந்த பெண் சடலத்தை மீட்டு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். ஒன்றாம் எண் டோல்கேட் அருகே உள்ள கொள்ளிடம் பாலத்தின் கீழ் அடையாளம் தெரியாத உடல் கிடப்பதாக கொள்ளிடம் காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் விரைந்தனர்.

கொள்ளிடம் ஆறு அருகே பாதி எரிந்த நிலையில் பெண் சடலம் : போலீசார் விசாரணையில்  பகீர் தகவல்..!!! - Update News 360 | Latest Tamil News Online | Live News |  Breaking News Online ...

பின் அங்கு சென்று பார்த்ததில் உயிரிழந்தவர் 35 வயதுடைய பெண் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். பின்னர், தடயவியல் நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டு தடயங்கள் ஏதும் உள்ளதா என சோதனை செய்து கொண்டிருந்தனர், அந்தப் பெண் கொலை செய்யப்பட்டு எரிக்கப்பட்டாரா? என காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கொள்ளிடம் பாலத்தின் கீழ் அடையாளம் தெரியாத பெண் எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெண்ணின் உடலை கைப்பற்றிய போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க

From around the web