அதிர்ச்சி.... மீன் சாப்பிட்டதால் கை, கால்களை இழந்து உயிருக்கு போராடும் பெண்!!

 
லாரா

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் வசித்து வருபவர் லாரா பராசாஸ்.  40 வயதாகும் இவருக்கு மீன் உணவுகள் என்றால் உயிர் . எப்போதும் தன்னுடைய சாப்பாட்டு மெனுவில்மீன் உணவை சேர்த்துக்கொள்வார். அதே போல் சில நாட்களுக்கு முன்  உள்ளூர் சந்தைக்கு சென்று திலப்பியா என்ற மீனை வாங்கி வந்து வீட்டில் சமைத்து சாப்பிட்டார். சிறிது நேரத்தில் அவரது உடலில் மாற்றம் ஏற்பட்டது. கை விரல்கள் கறுப்பாக மாறத் தொடங்கின. பாதங்கள் மற்றும் கீழ் உதடு கறுப்பானது.

லாரா

 
  உடனே மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.  ஆனாலும் சிறிது நேரத்திலேயே அவர் கோமா நிலைக்கு சென்றார். சிறுநீரகமும் பாதிக்கப்பட்டது. மேலும் கை, கால்களும் முற்றிலும் செயல் இழந்ததால் உயிருக்கு போராடி வருவதாக லாரா பராசாஸ் தோழி மெசினா தெரிவித்து உள்ளார். 
இது குறித்து அவரது  மெசினா ”லாரா கிட்டத்தட்ட தன் உயிரை இழந்துவிட்டார். அவருக்கு சுவாச கருவி பொருத்தப்பட்டு உள்ளது. கடல் உணவுகளில் பொதுவாக கொடிய பாக்டீரியாக்கள் காணப்படும். இந்த உணவுகளை முறையாக தயார் செய்து சாப்பிடாவிட்டால் உடலுக்கு தொந்தரவு கொடுக்கும். சந்தையில் இருந்து வாங்கி வந்த மீனை சரியாக வேக வைக்காமல் அப்படியே சாப்பிட்டு விட்டார். அவருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

லாரா


 இதுகுறித்து மருத்துவமனை விடுத்த செய்திக்குறிப்பில் ”லாரா  Vibrio Vulnificus என்ற கொடியவகை பாக்டீரியாவால் பாதிக்கப்பட்ட மீனை சரியாக சமைக்காமல் சாப்பிட்டுள்ளார். இதனால் உடல் உள்ளுறுப்புக்களை நேரடியாக தாக்கியுள்ளன.   பாக்டீரியா காணப்படும் கடல் நீரில் குளித்தாலும், உயிருக்கு ஆபத்து தான் ”என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.  இந்த பாக்டீரியாவால், லாராவின் கை விரல்கள், உதடு, பாதங்கள் அழுகி கருத்துபோனது. உடல் முழுவதும் பாக்டீரியா தொற்று பரவியதால் அவரது சிறுநீரகம் பாதிக்கப்பட்டது. அவரை   கோமா நிலைக்கு கொண்டு சென்று, வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளித்து வருகின்றனர்.  லாராவின் இரு கைகள், கால் பாதங்கள் ஆபரேஷன் மூலம் அகற்றப்பட்டன. அவரது உயிரை காக்க வேறு வழியில்லாததால் கை, கால்கள் துண்டிக்கப்பட்டன என மருத்துவர்கள்  கூறியுள்ளனர். 

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாத மகிமைகள் , வழிபாடு, பலன்கள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாசம் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது?! அறிவியல் காரணம்...

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web