நிர்வாண நிலையில் இளம்பெண் சடலம்... ஈரோடு தோட்டத்தில் பரபரப்பு!
ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள கெட்டிசெவியூரில், வாழைத்தோட்டத்தில் பெண் ஒருவரின் சடலம் புதைக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மோகன் என்பவருக்குச் சொந்தமான தோட்டத்தில் வாழை, சோளம் உள்ளிட்ட பயிர்கள் பயிரிடப்பட்டு வந்தன. இத்தோட்டத்தில் காளான் வளர்வதால், அக்கம் பக்கத்தினர் அடிக்கடி வந்து பறித்து செல்வது வழக்கம். நேற்றைய தினம் முருகேசன் என்றவர் வழக்கம்போல் தோட்டத்திற்கு வந்தபோது, இடம் முழுவதும் ரத்தக்கறைகள் தென்பட்டன. மேலும், ஒரு இடத்தில் புதிதாக மண் தோண்டி மூடப்பட்டதையும் கவனித்தார். உடனே அவர் தோட்ட உரிமையாளர் மோகனுக்கு தகவல் தெரிவித்தார்.

தகவல் அறிந்த சிறுவலூர் போலீசார், நம்பியூர் தாசில்தார் மற்றும் மருத்துவ அதிகாரிகளுடன் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, அந்த இடத்தை தோண்டினர். அப்போது சுமார் மூன்று அடி ஆழத்தில், நிர்வாண நிலையில் பெண் சடலம் கிடந்தது. சுமார் 30 வயது மதிக்கத்தக்க அந்த பெண், கல்லால் தலையில் தாக்கப்பட்டதும், கழுத்தில் கத்தியால் குத்தப்பட்டதும் தெரியவந்துள்ளது. சடலத்துக்கு அருகில் கத்தி, அரிவாள் போன்ற ஆயுதங்களும் கிடந்தன.

பெண்ணை கொலை செய்த பின் தோட்டத்திலேயே புதைத்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். கொலை செய்யப்பட்டவர் யார் என்பது இதுவரை வெளிவராத நிலையில், அவரின் அடையாளத்தைத் தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். செல்போன் சிக்னல், வாகன எண்கள் உள்ளிட்ட பல்வேறு தடயங்கள் மூலம் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த கொலை சம்பவம் ஈரோடு மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!
