பெண்கள் தேசிய பூங்காக்களில் நுழையத் தடை!! தாலிபான்கள் அட்டூழியம்!!

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றிய பிறகு பல்வேறு அதிரடி கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக பெண்களின் உரிமைகள் மறுக்கப்படுகின்றன. அத்துடன் தனியாக செல்ல உரிமையில்லை. தொலைக்காட்சிகளில் நடிக்கத் தடை, பொதுவெளியில் செல்ல கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஆட்சியைக் கைப்பற்றியபோது கடுமையான கட்டுப்பாடுகள் எதுவும் விதிக்க மாட்டோம் என்று தலிபான்கள் உறுதி அளித்திருந்தனர். அந்த உறுதியை மீறிய தலிபான் ஆட்சியாளர்கள் கட்டுப்பாடுகளை அதிகரித்து வருகின்றனர்.
நாட்டில் உள்ள பெண்கள் தலைமைப் பதவிகள் வகிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. உயர்கல்வி படிக்கவும், ஆண் துணையின்றி பயணம்செய்யவோ, வேலை செய்யவோ தடை. அத்துடன் குளியலறைகள், உடற்பயிற்சி கூடங்கள் மற்றும் பூங்காக்கள் உட்பட பல பொது இடங்களுக்கும் பெண்கள் செல்ல அனுமதி கிடையாது. அந்த வரிசையில் இப்போது ஆப்கானிஸ்தானின் மிகவும் பிரபலமான பாமியன் மாகாணத்தில் உள்ள பேண்ட்-இ-அமிர் தேசிய பூங்காவுக்கு செல்ல பெண்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் உலக நாடுகளில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன் கடும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன. பூங்காவிற்குச் செல்லும் போது பெண்கள் ஹிஜாப் அணியும் நடைமுறையை சரியாக கடைப்பிடிப்பதில்லை என அமைச்சர் குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும் பூங்காக்களை சுற்றிப் பார்ப்பது பெண்களுக்கு அவசியமில்லாத ஒன்று என்கிறார். இதற்கு ஒரு தீர்வு கிடைக்கும் வரை பெண்கள் அந்த பூங்காவிற்கு செல்வதை தடை செய்யும்படி, பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் மதத் தலைவர்களிடம் வலியுறுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது. ஹிஜாப் அணியாமல் வருவது அல்லது சரியாக அணியாமல் வருவது குறித்த புகார்கள் எழுந்து வருவதால் இந்த தடை விதிக்கப்படுவதாக விளக்கம் அளித்துள்ளது. இவர்கள் பாமியான் வாசிகள் அல்ல. அவர்கள் மற்ற இடங்களிலிருந்து வருகை தருகிறார்கள் என பாமியன் ஷியா உலமா கவுன்சிலின் தலைவர் தெரிவித்துள்ளார். சில மாதங்களுக்கு முன்பு, ஹெராத் மாகாணத்தில் தோட்டங்கள் அல்லது பசுமையான இடங்களுடன் கூடிய உணவகங்களில் குடும்பங்கள் மற்றும் பெண்கள் நுழைய தடை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!