பெண்களும் அர்ச்சராகலாம்!! கரு சுமக்கும் பெண்கள் இனி கருவறையில் ...

 
பெண் அர்ச்சகர்

தமிழகத்தில் இன்றைய ஆளும் கட்சியின் தாயகம் நீதிக்கட்சி தான் . இதன் தலைவர் பெரியார் கடவுள் மறுப்பு கொள்கை உடையவர். அவர் அனைத்து சாதியினரும் கோயில் கருவறைக்குச் செல்லலாம். பெண்களும் கருவறை சென்று வழிபட தடையில்லை என  வலியுறுத்தி வந்தார். இதுகுறித்த  சட்டங்களை அப்போதைய முதல்வர் கலைஞர் கருணாநிதி இயற்றினார்.
இந்த சட்டத்தை எதிர்த்த வழக்குகளால் கலைஞர் கருணாநிதியால்  நிறைவேற்ற முடியவில்லை. தற்போது முதல்வராக பொறுப்பேற்ற ஸ்டாலின், இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் கோயில்களில் தலித் சமூகத்தினர் உட்பட அனைத்து சாதியை சேர்ந்தவர்களை அனைத்து கோவிகளிலும்   அர்ச்சகர்களாக நியமித்தார். இந்த நியமனத்தை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் அர்ச்சகர் நியமனம் தொடர்பாக தமிழ்நாடு அரசு விதித்த விதிகள் செல்லும்.


 

அனைத்து கோவில்களும்  ஆகம விதிப்படி இயங்கும் கோவில்களில் அந்த ஆகம விதிப்படி அர்ச்சகர்களை நியமிக்க வேண்டும் என தீர்ப்பளித்தது.முன்னதாக, கருணாநிதி  ஆட்சிகாலத்தின் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற சட்டம் 2006ல்   இயற்றப்பட்டது. இதன் அடிப்படையில் தமிழகத்தின் 6  6 பகுதிகளில் அர்ச்சகர் பயிற்சி பள்ளிகள் தொடங்கப்பட்டன. திருச்செந்தூர், திருவண்ணாமலை, பழனி, மதுரை ஆகிய இடங்களில் சைவ சமயக் கோயில்களுக்கான அர்ச்சகர் பயிற்சி மையங்களும், ஸ்ரீரங்கம், திருவல்லிகேனி ஆகிய இடங்களில் வைணவத்திற்கான அர்ச்சகர் பயிற்சி மையங்களும் தொடங்கப்பட்டன.


 


 முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு அர்ச்சகர் பயிற்சிகான பள்ளிகள் புணரமைக்கப்பட்டன. இந்த பள்ளியில் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் பயிற்சி பெற்று வந்தனர். இந்நிலையில், தமிழக அரசின் அர்ச்சகர் பயிற்சி பள்ளியில் ரம்யா, கிருஷ்ணவேணி, ரஞ்சிதா என 3 பெண்கள்  பயிற்சி முடித்துள்ளனர். அவர்களுக்கான சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
அர்ச்சகர் பயிற்சியை பெண்கள் முடிப்பது இதுவே முதல் முறை. அர்ச்சகர் பயிற்சி முடித்த இந்த  3  பெண்களும் விரைவில் கோயில்களில் அர்ச்சகராக நியமிக்கப்படுவார்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளன. 


இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின்  “பெண்கள் விமானத்தை இயக்கினாலும், விண்வெளிக்கே சென்று வந்தாலும் அவர்கள் நுழைய முடியாத இடங்களாகக் கோயில் கருவறைகள் இருந்து வந்தன. பெண் கடவுளர்களுக்கான கோயில்களிலும் இதுவே நிலைப்பாடு.  அந்நிலை இனி இல்லை! அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் எனப் பெரியாரின் நெஞ்சில் தைத்த முள்ளை நமது திராவிடமாடல் ஆட்சி அகற்றியதில், கரு சுமக்கும் பெண்களும் இனிக் கருவறைக்குள்.” என பதிவிட்டுள்ளார்.
 

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web