ஓசியில் ஆம்லெட் , டீ குடித்து விட்டு அடாவடி!! பெண் காவலர்கள் பணியிடை நீக்கம்!!

 
பெண்காவலர் அடாவடி

போலீஸ்காரர்கள் என்றாலே  அடாவடி தான் என்ற அளவுக்கு நுழையும் கடைகளில் தேவையானதை வாங்கி கொண்டு பணம் தராமல் செல்வதை பல திரைப்படங்களில் பார்த்துள்ளோம். இதே போல் நிஜத்திலும் பல இடங்களிலும் இவை நடக்க தொடங்கியுள்ளது. பொதுமக்கள் பலரும் அச்சப்பட்டு ஒதுங்கி நிற்கின்றனர். அவர்கள் கேட்பதை எடுத்து கொடுத்து விட்டு புலம்பி நிற்கின்றனர்.  ஆனால் காஞ்சிபுரத்தில் கடை உரிமையாளர் ஒருவர் தைரியமாக காவலர்கள் மீதே புகார் அளித்துள்ளனர். 

 காஞ்சிபுரம் மாவட்டம் படப்பையில் கூடுவாஞ்சேரி அனைத்து மகளிர் காவல் நிலையம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு பணிபுரியும் பெண் காவலர்கள் வழக்கமாக  படப்பையில் உள்ள ஒரு கடையில் தான் டீ, பிஸ்கட், பிரட் சாப்பிடுவதை வழக்கமாக கொண்டிருந்தனர்.  இதே போல் கடந்த சில நாட்களுக்கு முன்னர் குறிப்பிட்ட கடையில் பிரட் ஆம்லெட், ஜூஸ், பிஸ்கெட், டீ   குடித்துவிட்டு அதற்கு பணம் தர மறுத்துவிட்டனர்.  

அடாவடி

இது குறித்து  கடை ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. படப்பையில் பிரட் ஆம்லெட், ஜூஸ், டீ குடித்துவிட்டு,அதற்கான பணம் தர மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக எழுந்த புகாரின் அடிப்படையில், கூடுவாஞ்சேரி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் விஜயலட்சுமி உட்பட 4 போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.   

பெண்காவலர்


 கடை உரிமையாளர் மணிமங்கலம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்  அடிப்படையில் தாம்பரம் காவல் ஆணையர் அமுல்ராஜ் விசாரணை நடத்த உத்தரவிட்டார். இந்த விசாரணையில் இவர்களின் குற்றம் நிரூபணம் செய்யப்பட்டது.   தகராறில் ஈடுபட்டதாக கூடுவாஞ்சேரி மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் விஜயலட்சுமி, ஓட்டுநர் ஜெயமாலா, மற்றும்  2  பெண் காவலர்கள் உட்பட 4 பேரை பணியிடை நீக்கம் செய்து தாம்பரம் காவல் ஆணையர் அமுல்ராஜ் உத்தரவு பிறப்பித்துள்ளார். 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web