ஓடும் பேருந்தில் செருப்பால் தாக்கிக் கொண்ட பெண்கள்.. பதறிய பயணிகள்..!

 
கர்நாடக பேருந்து

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள மெஜஸ்டிக் பகுதியில் இருந்து கிருஷ்ணராஜபுரம் நோக்கி அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது பஸ்சின் முன் மற்றும் பின் இருக்கைகளில் அமர்ந்திருந்த இரு பெண்களுக்கு இடையே ஜன்னல் கண்ணாடியை எந்தப் பக்கம் அதிகம் திறப்பது என்பது தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டது.

பேருந்தில் மோதிக்கொண்ட பெண்கள் வாக்குவாதம் முற்றி செருப்பால் தாக்கிக்கொண்ட  சம்பவம் | two ladies fight with chappals in running govt bus at bangalore

இருவரும் ஒருவரையொருவர் திட்டிக் கொண்டு ஒரு கட்டத்தில் செருப்பால் தாக்கிக் கொண்டனர். இது தொடர்பான காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது.வாக்குவாதம் தொடர்ந்ததால், ஒரு கட்டத்தில் இருவரும் ஒருவரையொருவர் தகாத வார்த்தைகளால் திட்டிக் கொண்டனர். இறுதியில் இருவரும் செருப்பைக் கழற்றி ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர்.

Bengaluru: Women attack each other with shoes on BMTC bus over window issue  | Video | | Bengaluru News - News9live

இதற்கிடையில், இருவரும் தொடர்ந்து மோதிக்கொண்டதால், ஓட்டுநர் மற்றும் நடத்துனர் சமாதானப்படுத்த முயன்றனர். இதனால் சக பயணிகள் அலறினார்கள். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருவதால், இதற்கெல்லாம்  சண்டை போடலாமா என்ற  கருத்துக்கள் பதிவு செய்யப்பட்டு வருகிறது.

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க

From around the web