பெண் வழக்கறிஞர் தூக்கிட்டு தற்கொலை... !! வக்கீல்கள் போராட்டம்!!

பஞ்சாப் மாநிலம், அமிர்தசரசில் வசித்து வருபவர் ஹீனா பானோட். இவருக்கு வயது 28. வழக்கறிஞராக பணிபுரிந்து வரும் இவருக்கு 2020ல் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஒருமகள். இவர் தமது கணவர், குழந்தைகளுடன் ஜபால் சாலையில் உள்ள கிரான்ட் சிட்டி பகுதியில் ஹீனா வசித்து வந்தார். கடந்த சில மாதங்களாகவே ஹீனாவுக்கும், மாமியாருக்கும் இடையே சொத்துத் தகராறு ஏற்பட்டது.
இது குறித்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், வீட்டில் தூக்கிட்டு ஹீனா இன்று தற்கொலை செய்து கொண்டார்.இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீஸார் ஹீனாவின் உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர். அப்போது ஹீனா எழுதிய கடிதம் போலீஸாரிடம் சிக்கியது. அதில், தனது தற்கொலைக்கு மாமியாரும், மாமனாரும் தான் காரணம் என குறிப்பிட்டு இருந்தார்.
இது குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு தீவிர விசாரணை மேற்க்கொள்ளப்பட்டு வருகிறது. தற்கொலை செய்த ஹீனாவின் சகோதரர் வழக்கறிஞராக பணிபுரிகிறார். ஹீனாவின் தந்தை நீதிபதியிடம் உதவியாளராக பணிபுரிந்து வருகிறார் . இந்நிலையில் ஹீனாவின் மரணத்திற்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமிர்தசரஸ் வழக்கறிஞர்கள் சங்கம் இன்று நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம் நடத்தியதும் குறிப்பிடத்தக்கது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!