4,00,00,000/- கோடி மோசடி செய்ததாக இந்து அமைப்பின் பெண் தலைவர் கைது!! பரபரக்கும் தலைநகர்!!

 
சைத்ரா

கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் வசித்து வரும்  தொழிலதிபர் கோவிந்த்பாபு பூஜாரி. இவருக்கு வயது 44. இவர் பெங்களூருவில் உள்ள பந்தோபால்யா காவல் நிலையத்தில்  பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார்.  அதில், மே மாதம்  கர்நாடகா சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில்  உடுப்பி மாவட்டம், பைந்தூரில் பாஜக எம்எல்ஏ சீட்டு வாங்கித் தருவதாக இந்து அமைப்பின் ஆதரவாளரும், பஜ்ரங் தள் தலைவருமான சைத்ரா குந்தாபூர் உட்பட 7 பேர் தன்னிடம் 4 கோடி ரூபாய் மோசடி செய்துள்ளனர்.  

சைத்ரா
உடுப்பி கிருஷ்ணா மடத்தில் வசித்து வரும்   இந்து தீவிர ஆதரவாளரான சைத்ரா குந்தாபூர் உட்பட 4   பேரை  காவல்துறையினர்  கைது செய்தனர்.  மேலும் 4 பேரை தேடி வருகின்றனர். இது குறித்து காவல்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில்  " எம்எல்ஏ சீட்டு வாங்கித் தருவதாக  ஜூலையில் தொடங்கி மார்ச் 2023 வரை பணம் பெறப்பட்டுள்ளது. சீட்டு கிடைக்காததால் கோவிந்த்பாபு, சைத்ராவிடம் கேட்ட போது, விஸ்வநாத் என்ற ஆர்எஸ்எஸ் தலைவரிடம் பணம் இருப்பதாக கூறியுள்ளார்.

போலீஸ்


இதனால் சந்தேகம் அடைந்த கோவிந்த்பாபு விசாரணை நடைபெற்ற போது  விஸ்வநாத் போல ரமேஷ் என்பவரை வேடமிட்டு சைத்ரா குந்தாபூர் பணம் பெற்று நாடகமாடினார். அவருடைய உத்தரவின் பேரில்   அவிநவ ஹலஸ்ரீ என்பவரிடம் ரூ.1.5 கோடி கொடுத்துள்ளதாக தொழிலதிபர் கோவிந்த்பாபு தெரிவித்துள்ளார்.  இவ்வழக்கு குறித்து   சைத்ரா குந்தாபூர், ககன் கடூர், ஸ்ரீகாந்த் நாயக் மற்றும் பிரசாத் பைந்தூர் ஆகியோரை கைது செய்துள்ளோம். மேலும்  4  பேரை தேடி வருகிறோம்" எனத் தெரிவித்துள்ளனர்.  பாஜக சார்பில் போட்டியிட சீட்டு வாங்கித் தருவதாக ரூ 4 கோடி  மோசடியில் ஈடுபட்டதாக பஜ்ரங் தள் தலைவர் சைத்ரா குந்தாபூர் கைது செய்யப்பட்டதால் மாநிலம் முழுவதும் பெரும்  பரபரப்பு ஏற்பட்டுள்ளது.  

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web