இன்று மாதம் ரூ1000 மகளிர் உரிமை திட்டம்!! இல்லத்தரசிகள் உற்சாகம்!!

 
மகளிர் உரிமை தொகை

இன்று செப்டம்பர் 15ம் தேதி வெள்ளிக்கிழமை காஞ்சிபுரத்தில் மாதம் தோறும் மகளிருக்கு ரூ1000 உதவித்தொகை திட்டத்தினை முதல்வர் தொடங்கி வைக்கிறார். அறிஞர் அண்ணாவின் பிறந்த நாளை முன்னிட்டு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கபடுகின்றன.  இல்லத்தரசிகளுக்கு 1000 ரூபாய் உரிமைத் தொகை வழங்கப்படும் என 2021  திமுக தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.  நிதிநிலையை காரணம் காட்டி இதுவரை மகளிர் உரிமைத் தொகை திட்டம் தொடங்கப்படவில்லை.  இன்னும் சில மாதங்களில் லோக்சபா தேர்தல் வர உள்ள நிலையில் செப்டம்பர் 15 முதல் மகளிர் உரிமைத் தொகை திட்டம் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

மகளிர் உரிமை திட்டம்

இத்திட்டத்தில் வங்கிகள் மூலம் தகுதி வாய்ந்த மகளிருக்கு மாதம்தோறும் ரூ1,000 அனுப்பி வைக்கப்படும் . தமிழகம் முழுவதும்  மொத்தம் 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் பயனாளர்கள் இத்திட்டத்தில் பயனடைவர்.  இத்திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அண்ணாவின் பிறந்தநாளில் காஞ்சிபுரத்தில் உள்ள பச்சையப்பன் ஆடவர் கல்லூரியில்   தொடங்கி வைக்கிறார். அதன்படி பயனாளிகளுக்கு ஏடிஎம் கார்டுகளை அளிக்க இருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். இதனையடுத்து பயனாளிகளின் வங்கிக்கணக்கில் ரூ.1000 வரவு வைக்கப்படும். ஏடிஎம் கார்டை  பயன்படுத்தி ரூ1000  பணத்தை பெண்கள் எடுத்துக்கொள்ளலாம். ஒரு கோடிக்கும் மேல் பயனாளிகள் உள்ளதால் ஒரே நாளில் பணம் வரவு வைக்க முடியாது. இதனால்  படிப்படியாக  பணத்தை வரவு வைக்கும் பணி தொடங்கப்பட்டு செப்டம்பர் 18ம் தேதிக்குள் பயனாளிகள் அனைவரது வங்கிக் கணக்கிலும் ரூ1000 செலுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மகளிர் உரிமை தொகை

பயனாளர்கள் விண்ணப்பங்களில் குறிப்பிட்டுள்ள வங்கி எண்ணுக்கு ஒரு ரூபாய் அனுப்பி சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதனை உறுதி செய்யும் வகையில்  குறுஞ்செய்தியும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் பயனாளர்களின் எண்ணிக்கை ஒரு கோடியை தாண்டுவதால்   அதிக அளவிலான நிதிப் பரிவர்த்தனை நடைபெற உள்ளதாலும் நிதித்துறை அறிவுறுத்தல்படி முன்கூட்டியே பணம் அனுப்பி சோதனை மேற்கொள்ளப்படுகிறது. பயனாளர்களுக்கான நிதி பல்வேறு பொதுத்துறை வங்கிகள் மூலம்  அனுப்பப்பட உள்ளதாக நிதித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.   இந்த அறிவிப்பால் குடும்பத்தலைவிகள் பெருமகிழ்ச்சி அடைந்துள்ளனர்

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web