இல்லத்தரசிகள் உற்சாகம்... இன்றே வங்கி கணக்கில் மகளிர் உரிமைத் தொகை!!

 
மகளிர் உரிமை தொகை

தமிழகத்தின் அறிஞர் அண்ணாவின் 115வது பிறந்த நாளில்  கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தை முதல்வர்  ஸ்டாலின்  செப்டம்பர் 15ம் தேதி  தொடங்கி வைத்தார். காஞ்சிபுரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வர்  ஸ்டாலின் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தில்   1.06 லட்சம் பயனாளிகள் பலன் அடைந்தனர்.  

மகளிர் உரிமைத் தொகை

கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில் நிராகரிக்கப்பட்டவர்கள் மீண்டும் இ சேவை மூலம் விண்ணப்பிக்கலாம் எனத்  தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்  கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் விண்ணப்பித்து நிராகரிக்கப்பட்டவர்கள் செப்டம்பர் 21 ம் தேதி முதல் மீண்டும் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு அரசு தெரிவித்தது.

உரிமை திட்டம்

தகுதியான நபர்களுக்கு 30 நாட்களுக்குள் கோட்டாட்சியர் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தமிழக அரசு உறுதி அளித்தது. இந்நிலையில் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில் அக்டோபர் மாதத்திற்கான ரூ1000  செலுத்தும் பணி தொடங்கியுள்ளது. இம்மாதம் 15ம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் இன்றே மக்களின் வங்கி கணக்குகளில் பணம் செலுத்தும் பணி தொடங்கியுள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாத மகிமைகள் , வழிபாடு, பலன்கள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாசம் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது?! அறிவியல் காரணம்...

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

From around the web