அதிர்ச்சி... மர்மக் காய்ச்சலால் பெண் பயிற்சி மருத்துவர் பலி!!

 
சிந்து

வடகிழக்கு பருவமழை விரைவில் தொடங்க இருக்கும் நிலையில் மழைக்கால நோய்கள் அதிகரிக்க தொடங்கியுள்ளன. வழக்கமாக வரும் சளி, இருமல், காய்ச்சல் இவைகளுடன் டெங்கு, நிஃபா வைரஸ்களும் பரவத் தொடங்கியுள்ளன.  ஏற்கனவே சென்னையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சிறுவன் உள்ளிட்ட 3 பேர் உயிரிழந்தனர்.  டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை சுகாதாரத்துறை தீவிரப்படுத்தியுள்ளது.  

மாநகராட்சி தீவிரம்! சளி, காய்ச்சல் உடையவர்கள் வீடு, வீடாக கணக்கெடுப்பு!


 கேரள மாநிலத்தில் வசித்து வரும் சிந்து என்ற மாணவி 5 ஆண்டு மருத்துவபடிப்பை முடித்து விட்டு திருவாரூர் அரசு மருத்துவமனையில் பயிற்சி மேற்கொண்டு வந்தார்.கடந்த இரண்டு நாட்களாக சிந்து காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில்  நேற்று காலை அவர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். 

காய்ச்சல்
அவரின் ரத்த மாதிரிகளை பரிசோதித்த போது அவருக்கு டைபாய்டு காய்ச்சல் என முடிவுகள் வெளியாகின. இதனையடுத்து மீண்டும் இரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில்  முடிவுகள் வருவதற்கு முன்னர் இன்று அதிகாலையில் அவர் உயிரிழந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web