பெண்கள் உலகக்கோப்பை கிரிக்கெட்... பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா அசத்தலான வெற்றி!

 
இந்தியா பெண்கள் மகளிர் கிரிக்கெட்

நேற்று நடைபெற்ற பெண்கள் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் 88 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா அசத்தல் வெற்றி பெற்றுள்ளது. 

இந்தியா மற்றும் இலங்கையில் 13வது பெண்கள் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி தொடர் நடந்து வருகிறது. இதில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம் ஆகிய 8 அணிகள் பங்கேற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் டாப்-4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும்.

மகளிர் கிரிக்கெட்

இந்நிலையில், இலங்கையில் கொழும்புவில் உள்ள பிரேமதாசா ஸ்டேடியத்தில் நேற்று தொடரின் 6-வது லீக் ஆட்டத்தில் இந்தியா  மற்றும் பாகிஸ்தான் அணிகள் விளையாடின. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இந்தியா 50 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 247 ரன்கள் குவித்தது. பாகிஸ்தான் தரப்பில் அந்த அணியின் டையானா பைஹ் அதிக அளவாக 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

ஸ்மிருதி மந்தனா

அதனை தொடர்ந்து, 248 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் பாகிஸ்தான் களமிறங்கியது. ஆனால், தொடக்க வீராங்கனைகள் முனிபா 2 ரன்களிலும், ஷமாஸ் 6 ரன்களிலும் அவுட் ஆனார்கள்.  பாகிஸ்தான் அணி, 43 ஓவர்கள் முடிவில் 10 விக்கெட்டுகள் இழப்பிற்கு 159 ரன்கள் எடுத்தது. இதனால் இந்திய அணி 88 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?