மகளிர் தின ஸ்பெஷல் | ஹோட்டலில் மாமியாரும், மருமகளும் உணவு ஊட்டி விடும் போட்டி!

 
மாமியர் மருமகள்

ஏதோ வருஷத்துல ஒரு நாள் இப்படி மகளிர் தினத்தைக் கொண்டாடாமல் தினம் தினம் கொண்டாடினால் எப்படியிருக்கும் என்று வேடிக்கைப் பார்க்க திரண்டருந்த கணவன்மார்கள் புன்முறுவல் பூக்க, மருமகளுக்கு மாமியாரும், மாமியாருக்கு மருமகளும் அன்பொழுக உணவை  ஊட்டி விட்டுக் கொண்டிருந்தார்கள். மாமியர் மருமகள் உறவை எலியும் பூனையுமாகவே சித்தரிக்கும் சமூகத்தில் மாற்றத்தை நோக்கி நகர்கிற விதமாக ஈரோட்டில் தனியார் உணவகம் ஒன்று அறிவித்துள்ள போட்டி பல்வேறு தரப்பினரிடையே பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. மாமியார், மருமகள் இடையே உள்ள பந்தத்தை வலுப்படுத்தும் வகையில், ஈரோட்டில் உள்ள வேதாஸ் உணவகத்தின் உரிமையாளர் பூபதி போட்டியை அறிவித்தார்.

அதன்படி, மாமியார் மற்றும் மருமகள் ஆர்டர் செய்த உணவை ஒருவருக்கு ஒருவர் ஊட்டினால், உணவு இலவசம் என்று அறிவித்தார். கடந்த நான்கு ஆண்டுகளாக இந்தப் போட்டியை அறிவித்து நடத்தி வருகிறார். ஒவ்வொரு ஆண்டும் மகளிர் தினத்தன்று இந்தப் போட்டி நடத்தப்படுகிறது.

ஈரோடு மட்டுமின்றி, அருகில் உள்ள மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான மாமியார், மருமகள்கள் பங்கேற்று, ஒருவருக்கு ஒருவர் ஊட்டி மகிழ்கின்றனர். அந்த வகையில் இந்த ஆண்டும் உணவகத்தில் போட்டி அறிவிக்கப்பட்டது.

இப்போட்டியில் ஈரோடு சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான மாமியார்-மருமகள் ஜோடி கலந்துகொண்டனர். பின்னர் ஒருவருக்கொருவர் அன்புடன் உணவை ஊட்டி மகிழ்ந்தனர். இந்த போட்டியின் முடிவில், வெற்றி என்பது மாமியார் மற்றும் மருமகளுக்கு இடையிலான உறவு மட்டுமல்ல. உணவை வீணாக்காமல் பார்த்துக் கொள்வதும் இதன் நோக்கமாகும். இந்த உணவகத்தில் போட்டியின் முடிவில் வெற்றி பெற்றவர்களுக்கு இரண்டு விதைப் பந்துகள் வழங்கப்படுவது மற்றுமொரு சிறப்பு அம்சமாகும்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

மாசி மாதத்துல இத்தனை விசேஷமா... இந்த நட்சத்திர தினங்களை மிஸ் பண்ணாதீங்க!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

From around the web