மகளிர் உலகக் கோப்பை: இந்தியாவை வீழ்த்தி ஆஸ்திரேலியா வரலாற்றுச் சாதனை படைத்தது.. அதிக ரன்கள் சேசிங்!
இந்தியா–இலங்கை இணைந்து நடத்தும் 13வது மகளிர் உலகக் கோப்பை லீக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் இன்று விசாகப்பட்டினத்தில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதின.

டாஸ் வென்ற ஆஸ்திரேலியா, இந்தியாவை முதலில் பேட்டிங் செய்ய அழைத்தது. தொடக்க வீராங்கனைகள் ஸ்மிருதி மந்தனா (80), பிரதிகா ரவல் (75) சிறப்பாக ஆடியதால், இந்தியா 48.5 ஓவர்களில் 330 ரன்கள் எடுத்தது. அனபெல் சுதர்லாந்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆஸ்திரேலிய பந்துவீச்சில் சிறந்தார்.

பின்னர் 331 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணியில் கேப்டன் அலிசா ஹீலி அதிரடியாக சதம் அடித்து பிரகாசித்தார். அவர் 21 பவுண்டரிகளும் 3 சிக்ஸர்களும் அடித்து 142 ரன்கள் குவித்தார். எலிஸ் பெர்ரி (47), ஆஷ்லி கார்ட்னர் (45) ஆகியோரும் துணைநின்றனர்.இறுதியில் ஆஸ்திரேலியா 49 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கு 331 ரன்கள் எடுத்து வெற்றியைப் பதிவு செய்தது. இதன் மூலம் பெண்கள் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக ரன்களை சேசிங் செய்து வென்ற அணியாக ஆஸ்திரேலியா புதிய உலகச் சாதனை படைத்துள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
