செம!! திருக்குறள் புத்தகத்தில் திருமண அழைப்பிதழ்!! மணப்பெண் தந்தை அட்ராசிட்டி!!

 
திருக்குறள் திருமண அழைப்பிதழ்

திருக்குறள் உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும். இதில் 1330 குறள்கள் பத்து பத்தாக 133 அதிகாரங்களின் கீழ் தொகுக்கப் பெற்றுள்ளன. இது அடிப்படையில் ஒரு வாழ்வியல் நூல். மாந்தர்கள் தம் அகவாழ்விலும் சுமுகமாக கூடி வாழவும், புற வாழ்விலும் இன்பமுடனும் இசைவுடனும் நலமுடனும் வாழவும் தேவையான அடிப்படைப் பண்புகளை விளக்குகிறது. இந்நூல் அறம், பொருள், இன்பம் அல்லது காமம் என்னும் முப்பெரும் பிரிவுகளாய் (முப்பால்) பிரித்தும் அழகுடன் இணைத்தும் கோர்த்தும் விளக்குகிறது.

திருக்குறள் திருமண அழைப்பிதழ்

இந்நிலையில், கிருஷ்ணகிரி அருகே மகளின் திருமண அழைப்பிதழை திருக்குறள் புத்தகத்துடன் இணைத்து அச்சிட்டு பெண்ணின் தந்தை அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பகுதியைச் சேர்ந்த முனிரத்தினம், பட்டாசு கடை நடத்தி வருகிறார். இவர் தனது மகளுக்கு திருமணம் செய்ய திட்டமிட்டு உள்ள நிலையில், அடுத்த மாதம் தேதி குறித்துள்ளார். தற்போது மகளின் திருமணத்திற்காக அழைப்பிதழ் அச்சடிக்க திட்டமிட்ட அவர், அனைவருக்கும் பயனுள்ளதாக அமைய வேண்டும் என நினைத்துள்ளார். 

திருக்குறள் திருமண அழைப்பிதழ்

இதற்காக அவர் புதிய முயற்சியாக திருமண அழைப்பிதழை திருக்குறள் புத்தகத்துடன் இணைத்து அச்சடித்து உள்ளார். திருக்குறள் புத்தகத்தின் முதல் பக்கத்திலும், கடைசி பக்கத்திலும் திருமண அழைப்பிதழை அச்சடித்து உள்ளார். மேலும் 1330 குறள்களும் விளக்கத்துடன் உள்ளவாறு அச்சடித்து உள்ளார்.இது குறித்து முனிரத்தினம் கூறுகையில், தன்னால் முடிந்தவரை அனைவரின் இல்லங்களிலும் திருக்குறளை கொண்டு சேர்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் அழைப்பிதழை இவ்வாறு அச்சடித்துள்ளதாக தெரிவித்தார்.

மேலும், திருமண அழைப்பிதழை பார்ப்பவர்கள் திருக்குறளையும் வாசிப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது எனவும் தனது மகளின் திருமணத்தில் தாம்பூல பைக்கு பதிலாக மரக்கன்றுகள் வழங்க உள்ளதாகவும் கூறினார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை