செம!! நாளை மறுநாள் சென்னையில் முதன் முறையாக தி எம்ப்ரஸ் சொகுசு கப்பல் சுற்றுலா !! ஆட்டம் போடத் தயாராகும் இளசுகள்!!

 
சொகுசு கப்பல்

தமிழகத்தின் முதல்வராக பொறுப்பேற்று ஒரு ஆண்டு நிறைவடைந்தை அடுத்து சாதனை விளக்க கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. துறை வாரியாக அரசுத்துறை செயலர்களுடன் முதல்வர் ஆலோசனை நடத்தி வருகிறார். துறை வாரியாக அறிவிக்கப்பட்ட திட்டங்கள், செயல்பாடுகள்,  தாமதங்களுக்கான காரணங்கள் , மேம்படுத்தும் நடவடிக்கைகள் குறித்து விரிவாக ஆலோசித்து வருகிறார். அதன் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் செயல்பாடுகளை திட்டமிட்டு அறிவித்து வருகிறார். 

சொகுசுக் கப்பல்
அதன் ஒரு பகுதியாக தமிழகத்தில் சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் வகையில் சென்னையில் முதன்முறையாக  தி எம்ப்ரஸ் சொகுசு கப்பல் சுற்றுலாவை அறிமுகப்படுத்துகிறார். இந்த திட்டத்தை முதல்வர் .ஸ்டாலின் ஜூன் 4 ம் தேதி தொடங்கி வைக்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஸ்டாலின்
மே17ம் தேதி தமிழகத்தில்  சுற்றுலாத் துறையை மேம்படுத்த எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து சட்டப்பேரவையில் அமைச்சர் விளக்கம் அளித்தார். அப்போது சென்னையில் இருந்து ஜூன் மாதத்தில் சொகுசு கப்பல் மூலமாக கடல் பகுதிக்கு சென்று திரும்பும் வகையில் சுற்றுலா திட்டம் தொடங்கப்படும் என அறிவித்திருந்தார்.அதனை செயல்படுத்தும் வகையில் சென்னையில் முதன்முறையாக கார்டிலியா நிறுவனம் அறிமுகப்படுத்தும் தி எம்ப்ரஸ் சொகுசு கப்பல் சுற்றுலாவை முதல்வர் நாளை மறுநால்  ஜூன் 4 ம் தேதி தொடங்கி வைக்கிறார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web