2026ல் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.5% சதவீதமாக இருக்கும்... உலக வங்கி கணிப்பு!

 
உலக வங்கி

2026ம் நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.5 சதவீதமாக இருக்கும் என உலக வங்கி தனது சமீபத்திய அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இது குறித்து உலக வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்தியா உலகில் மிக வேகமாக வளர்ந்து வரும் முக்கிய பொருளாதார நாடாக தொடர்ந்து திகழ்கிறது. 2026ம் நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.5 சதவீதம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்குக் காரணமாக வலுவான நுகர்வோர் செலவினம், மேம்பட்ட வேளாண்மை உற்பத்தி, கிராமப்புற ஊதிய உயர்வு ஆகியவை முக்கிய பங்காற்றுகின்றன” என குறிப்பிடப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் தெற்காசிய நாடுகளின் வளர்ச்சி குறித்தும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அதன்படி, வங்கதேசத்தின் வளர்ச்சி – 4.8%,  பூடானின் வளர்ச்சி – 7.3%, மாலத்தீவின் வளர்ச்சி – 3.9%, நேபாளத்தின் வளர்ச்சி – 2.1% என கணிக்கப்பட்டுள்ளது.

மேலும் அமெரிக்கா இந்திய ஏற்றுமதிகளுக்கு விதித்துள்ள 50 சதவீத வரிகள் எதிர்காலத்தில் நாட்டின் பொருளாதாரத்தை பாதிக்கக்கூடும் என்றும், அதன் விளைவாக 2026-27ம் ஆண்டிற்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) வளர்ச்சி 6.3 சதவீதமாக குறையக்கூடும் என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

எனினும் விவசாய உற்பத்தி மற்றும் கிராமப்புற ஊதிய உயர்வு எதிர்பார்த்ததை விடச் சிறப்பாக இருப்பதால், இந்தியா தனது வளர்ச்சியை நிலைநிறுத்தும் திறன் கொண்டதாக உலக வங்கி வலியுறுத்தியுள்ளது.

தெற்காசியாவின் மொத்த பொருளாதார வளர்ச்சி 2025ல் 6.6 சதவீதமாக இருந்தது. இது 2026ல் 5.8 சதவீதமாகக் குறையும் எனவும், பணவீக்கம் கட்டுக்குள் இருப்பதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.கடந்த ஜூன் மாதத்தில் உலக வங்கி இந்தியாவின் 2026ம் ஆண்டிற்கான வளர்ச்சியை 6.3 சதவீதம் என கணித்திருந்தது. தற்போது அதை 6.5 சதவீதமாக உயர்த்தி கணித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?