உலகக்கோப்பை அதிகாரப்பூர்வ கீதம் வெளியீடு.. வைரல் வீடியோ!!

 
உலகக்கோப்பை

13வது  உலக கோப்பை கிரிக்கெட் தொடர்  அக்டோபர் 5ம் தேதி தொடங்க உள்ளது. இதனை நேரில் கண்டுகளிக்க ரசிகர்கள் ஆவலுடன் டிக்கெட் முன்பதிவு செய்து காத்து கிடக்கின்றனர்.இந்த போட்டிகள்  நவம்பர் 19ம் தேதி வரை இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைபெற உள்ளது.  


 

மொத்தம் 10 அணிகள் கலந்து கொள்ளும் இந்த போட்டியில்   சென்னை, மும்பை, டெல்லி, அகமதாபாத், பெங்களூரு என நாட்டின் பல்வேறு நகரங்களில் உலகக்கோப்பை தொடர் நடைபெற உள்ளது.   போட்டி அட்டவணையும் வெளியிடப்பட்டுள்ளது. தொடக்க ஆட்டம் அகமதாபாத்தில் இங்கிலாந்து - நியூசிலாந்து இடையே நடைபெறுகிறது.    இந்திய அணி தனது தொடக்க ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை சென்னையில் எதிர்கொள்கிறது.  

உலகக்கோப்பை


உலகக்கோப்பை தொடரை பிரபலப்படுத்தும் விதமாக பாடல் ஒன்றை   ஐசிசி வெளியிட்டுள்ளது.  அந்த பாடல் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.  இந்த பாடலுக்கு ‘தில் ஜாஷ்ன் போலே’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த பாடலுக்கு பிரபல இசையமைப்பாளர் ப்ரீதம் இசையமைத்துள்ளார்.இந்த பாடலில் பாலிவுட் நடிகர் ரண்வீர் சிங் மற்றும் இந்திய கிரிக்கெட் வீரர் சாஹலின் மனைவி தனஸ்ரீ வர்மா ஆகியோர் நடித்துள்ளனர். தற்போது இந்த பாடல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாத மகிமைகள் , வழிபாடு, பலன்கள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாசம் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது?! அறிவியல் காரணம்...

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web