இன்று சர்வதேச கிக்பாக்சிங் போட்டி தொடக்கம்... 3 தமிழக வீரர்கள் பங்கேற்பு!!

 
கிக்பாக்சிங்

 சர்வதேச கிக்பாக்சிங் சாம்பியன்ஷிப் போட்டிகள் போர்ச்சுகல் நாட்டில் இன்று நவம்பர் 17ம் தேதி வெள்ளிக்கிழமை தொடங்கியுள்ளது.  இதில், இந்தியா உட்பட பல நாடுகளை சேர்ந்த சீனியர் மற்றும் மாஸ்டர்ஸ் கிக்பாக்சர்கள்  கலந்து கொள்கின்றனர்.இந்த போட்டியில்  இந்தியா சார்பில் 39 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். இவர்களில் 3 பெண்கள் உட்பட 9 வீரர்கள் தமிழகத்தில் இருந்து தேர்வாகியுள்ளனர்.

கிக்பாக்சிங்

அதில் காஞ்சிபுரத்தில் இருந்து நீனா, சரத்ராஜ், ரோஷினி  ஆகிய  3 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். காஞ்சிபுரம் புத்தேரி பகுதியில் வசித்து வரும்   நெசவாளர் நீலகண்டன் மகள் நீனா . இவர்   முதுகலை படிப்பு படித்து  வருகிறார். இவர், கடந்த 6 வருடங்களாக  கிக்பாக்ஸிங் பயிற்சி பெற்று இதுவரை 25 தங்கம், 5 வெள்ளி, 5 வெண்கல பதக்கம் பெற்றுள்ளார்.உத்திரமேரூர் பகுதியில் வசித்து வரும்  20 வயது சரத்ராஜ்  கடந்த 3 வருடங்களாக பயிற்சி பெற்று 15 தங்கம், 5 வெள்ளி மற்றும் 3 வெண்கல பதக்கம் வென்றுள்ளார். சாலவாக்கம் பகுதியில் வசித்து வரும்  ரோஷினி    கடந்த 3 வருடங்களில் 8 தங்கம், 12 வெள்ளி மற்றும் 2 வெண்கலம் உட்பட   பல பதக்கங்களை வென்றுள்ளார்.  

சர்வதேச கிக்பாக்சிங்

இந்திய அளவில் நடைபெற்ற  போட்டிகளில் இவர்கள் வெற்றி பெற்றனர். இன்று போர்ச்சுக்கல் நாட்டில் நடைபெறும் சர்வதேச கிக்பாக்ஸிங் போட்டிக்கு நீனா 55 கிலோ எடை பிரிவிலும், சரத்ராஜ் 74 கிலோ எடை பிரிவிலும், ரோஷினி 55 கிலோ எடை பிரிவிலும் விளையாட தேர்வு பெற்றுள்ளனர்.இதுகுறித்து வீரர்கள் விடுத்த செய்திக்குறிப்பில்  ‘விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்க தமிழக அரசு சிறப்பான நடவடிக்கை எடுத்து வருகிறது. தமிழகத்திற்கும் காஞ்சிபுரத்துக்கும் பெருமை சேர்க்கும் வகையில் பதக்கங்கள் வெல்வோம். அடுத்த ஆண்டு நடைபெறும் ஒலிம்பிக் போட்டியிலும் தங்கப் பதக்கம் வெல்வோம்” எனக் கூறியுள்ளனர்.  

60 நாட்களுக்கு சபரிமலை போறவங்களுக்கு உணவு தங்குமிடம் எல்லாமே இலவசம்

ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை மாதம் சொல்ல வேண்டிய ஸ்லோகம்

தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாதம் சிறப்புக்கள்

சபரிமலைக்குச் செல்பவர்கள் தினமும் சொல்ல வேண்டிய ஐயப்பன் ஸ்லோகம்!

கார்த்திகை பொறந்துடுச்சு... ஐயப்ப பக்தர்களுக்கு சபரிமலை சிறப்புக்கள்!!

From around the web