அட... பேஷன் ஷோவில் உலகத் தலைவர்கள் ... ஏஐயில் மாஸ் வீடியோ!

 
ஏஐ


 தொழில்நுட்ப அளவில் ஏஐ அபரிமிதமான வளர்ச்சி அடைந்து எது உண்மை, எது நகல் என கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு பெரும் குழப்பங்களை உருவாக்கி வருகிறது அந்த வகையில் உலகப் பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த பதிவில்  அமெரிக்க தொழிலதிபரும் டெஸ்லா மோட்டார்ஸ் நிறுவனத்தின் கட்டுமான தலைவருமான எலான் மஸ்க் பகிர்ந்துள்ள செயற்கை நுண்ணறிவு அதாவது AI மூலம் உருவாக்கப்பட்ட பேஷன் ஷோவின் வீடியோ வைரலாகி வருகிறது.

உலக தலைவர்கள் மிகவும் நவீன உடையில் நடப்பது காட்டப்பட்டுள்ளது. மேலும் அமெரிக்காவில் நடந்து வரும் அரசியல் கொந்தளிப்பு முதல் சமீபத்திய மைக்ரோசாப்ட் செயலிழப்பு வரை காட்சிகள் இடம் பெற்றுள்ளது. அதே போல் கைது உடையில் டிரம்ப், சக்கர நாற்காலியில் ஜோ பைடன், ஒபாமா, மோடி, புடின், கிம் ஜோங் உன், போப் பிரான்சிஸ் என உலகத் தலைவர்கள் வித்தியாசமான உடையில் பேஷன் ஷோவில் நடந்து வருகின்றனர்.  சமீபத்தில் நடந்த மைக்ரோசாப்ட் குளறுபடியையும்  கிண்டலடிக்கப்பட்டுள்ளது. அந்த வீடியோவில், பிரதமர் மோடி பல வண்ண நீண்ட கோட் அணிந்துள்ளார்.

மோடியின்  AI அவதாரமும் கருப்பு சன்கிளாஸ் அணிந்துள்ளார்.  கமலா ஹாரிஸ் வரும் காட்சி பிகினி உடையில் உள்ளது. வட கொரிய தலைவர் கிம் ஜாங் உன், முன்னாள் சபாநாயகர் நான்சி பெலோசி, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, சீன அதிபர் ஜி ஜின்பிங், ஆப்பிள் தலைமை நிர்வாக அதிகாரி டிம் குக், மெட்டாஸின் மார்க் ஜுக்கர்பெர்க், ஹிலாரி கிளிண்டன் மற்றும் பராக் ஒபாமா ஆகியோரும் வீடியோவில் வலம் வருகின்றனர். 

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!